பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

புறுதற்கு இந்நூல் பெருந்துணை செய்தல் ஒருதலை. இந் நூலுள் பொலிவுதரும் சில ஊர்ப்பேர்களின் வரலாறு சாம்பியும் சோம்பியும் நலிந்தும் மெலிந்துங் கிடக்கும் நம் மக்கட்கு அமிழ்தாகிப் புத்துயிர் வழங்கல் உறுதி. நூலின் நடைக்கண் நடம்புரியும் பீடும் மிடுக்கும் வீறும் நாட்டின் கவலையை நீக்கி, அதன்மாட்டு வேட்கையை எழுப்பி, அதை ஊக்குவனவாகும்,

'ஊரும் பேரும் என்னும் இந்நூல் காலத்துக் கேற்றது என்று கருங்கச் சொல்லலாம். இவ்விழுமிய நூலைச் செவ்விய முறையில் யாத்து உதவிய ஆசிரியர்க்கு என் வாழ்த்தும் நன்றியும் உரியனவாக. அவர்க்குத் தமிழ்நாடு கடமைப்படுவதாக. இத்தகைய நூல் பல. ஆசிரியரால் முகிழ்த்தல் வேண்டுமென்று தமிழ்த்தெய் வத்தை வழுத்துகிறேன். தமிழ் வாழ்க, தமிழ் வெல்க!"

ஆங்கில மொழியில் தமிழ் ஆராய்ச்சி:

பேராசிரியர் அவர்கள் தமிழ் நூல்கள் பலவும் தமிழின் சிறப்பைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்பி, பள்ளத்தில் வீழந்திருக்கும் குருடரை எல்லாம் விழிபெற்று எழச் செய்யும் விழுமிய குறிக்கோளுடை யன. அவர்தம் ஆங்கிலக் கட்டுரைகளும் நூல்களும், தமிழ் மொழியின் சொல்வளத்தின் அருமையை உல கறியச் செய்யும் உயர்நோக்கம் உடையவை. பேராசிரியர் அவர்களுடைய ஆங்கில தடையிலும் தமிழின் எளிமையும் இனிமையும் ஊர்ந்திருப்பது படிப்பார்க்குப் பேரின்பம் தருவதாகும். எதுகை மோனே இன்பம் ததும்ப அவர்கள் 'அறமும் மறமும் " பற்றி ஆங்கிலத்தில் வரைந்துள்ள

79. தமிழகம் ஊரும் பேரும்-முகவுரை, 80. 'Right Verses Might'—Anna is of O, R. Vol. X}. Parts

臀&2 箕953。54,