பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்........ 397

கட்டுரையை இதற்கு ஒரு சான்ருக எடுத்துக்காட்டலாம். பேராசிரியர் அவர்களின் ஆங்கில உரைநடையிலும் அவர்களின் தமிழ் உரைநடைச் சாயலைக் காணும்போது, அறிஞர் கார்லைல், நடை என்பது ஒர் ஆசிரியன் அணியும் ஆடை அன்று. அது அவன் உடலோடு ஒட்டிய தோலே ஆகும்." என்று கூறிய பட்டுணர்வு மொழியே நினைவுக்கு வருகின்றது.

ஆங்கில மொழியில் பேராசிரியர் அவர்கள் வரைந் துள்ள கட்டுரைகளுள் பல, தமிழின் மொழியியல்' பண் புகள் பற்றிய ஆராய்ச்சிகளே ஆகும். வேறு சில தமிழிலக்கிய நலன்கள் பற்றி ஆராய்ச்சியாகும். இத் தன்மையவே பேராசிரியர் அவர்களுடைய அனைத்திந்திய கிழக்குநாட்டுக் கலை மாநாட்டு ஆராய்ச்சி உரைகளும்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளியிடப் படும் கிழக்குக்கலே ஆராய்ச்சி இதழின் முதல் தெ குதியி லேயே பேராசிரியர் அவர்களின் சொற்களும் அவற்றின் பொருட்சிறப்பும்" என்னும் ஆங்கில ஆராய்ச்சியுரை வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, செந்தமிழும் கொச் சைத் தமிழும்" பற்றியும், உணரும் பேரும்' பற்றியும் ஆங்கில மொழியில் ஆராய்ச்சி உரைகள் வழங்கப்பட்டன. இவற்றுள் சொற்களும் அவற்றின் பொருட்சிறப்பும்’ என்பது சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாகவே 1953-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

81 An introduction to the Study to Literature—w. H

Hudson [1946], p. 27.

82, Linguistics. - 83. “Words and their significance"- Anriais of O. R. Woj i.

84, “Tamii–Literary & Colloquia!’—Anna is of O. R.Vol. H

p-11. - - -

35, * P lace narne Suffix s in Tamií’-Annals of C. R, Voi, #

o t9 Vl. - - - .