பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்......... 器星莎

கும் அவர்கள் எண்ணங்கள் யாவும் கலையுணர்வில் ஊறி எழுந்தவையே. தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களின் உணர்வோடு உணர்வாகி ஒன்றிப்போன அவர்கள் வாழ்க்கை, வேறு வகையாக இருத்தல் இயலாதன்முே? தமது கூர்த்த மதியால் எதையும் ஊடுருவிக் காணும் ஆற்றல் பெற்றிருந்த தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர் களே பேராசிரியர் அவர்களுடைய எழுத்தையும் பேச் சையும் எண்ணத்தையும் துருவிப் பார்த்து இவ்வுண்மை கையக் கண்டறிந்துள்ளார்கள் என்னும் உண்மைச அவர்தம் வாழ்க்கைக் குறிப்புகளை'ப் படிப்பார்க்கு இனிது புலனுகும்.

தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் மணிமொழி கள் வருமாறு:

'கம்பர் தமிழை வளர்ப்பதற்கென்று தமிழ் நாட்டில் அவ்வப்போது சிலர் பிறப்பதுண்டு. அவருள் சேதுப் பிள்ளை ஒருவர். இவ்வுலகம் கம்பர் கழகமானுல், உள்ள நிறைவு கொள்வோருள் சேதுப்பிள்ளை முதல்வராக இருப்பர். எவ்விடத் திலும் எம்மேடையிலும் எப்பேச்சிலும் அவர் கம்பரை மறப்பதில்லை. அவர் நா, கம்பரின் உறையுளாகியுள்ளது.

"என் தலைமையில் சேதுப்பிள்ளை பல முறை சொற் பொழிவாற்றியுள்ளார். அப்பொழிவு பொழிலாகும்; பொழில் மென்காற்றை வீசும் "

பேராசிரியர் அவர்களின் கலையுணர்வின் சிறந்த வெளிப்பாட்டை அவர்களோடு உரையாடும் பேறு பெற்றவர் நன்முக உணர்வர். பேல் நாடுகளில் உரையாடல் ஒரு சிறந்த இலக்கிய-நாகரிக-பண்பாட் டுக் கலையாகப் பல நூற்றுண்டுகளாகவே சிறந்து

91. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (1944), பக்1ே2.