பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塑瑟4

மூலவர்மன் ஒரு யாகம் புரிந்தான். அதைக் குறிக்கும் கல்வெட்டுத் தென்னிந்திய பல்லவ லிபியில் இருக்கிறது.

இவ்வாறு இந்து நாகரிகத்தை இந்தோனீசியாவில் பரப்பியவர்கள் தென்னிந்தியர்களே என்பதற்குப் பல சான்றுகள் உண்டு பல்லவர் காலத்துத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் காணப்படும் கிரந்த எழுத்தே இந்தோ விசியக் கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது. பல்லவ மன்னருடைய பெயர்களும் வர்மன் என்று முடியும். இந்தோனீசியக் கல்வெட்டுகள் குறிப்பிடும் சகம் என்னும் சாலிவாகன சகாப்தமே தென்னிந்தியாவில் வழங்கிவந்த தாகும். வட இந்தியாவில் வழங்கி வந்தது விக்கிரம சகாப்தம். ஒரு கல்வெட்டு, குஞ்சரகுஞ்சம் என்னும் ஊரைச் சேர்ந்த அரசவமிசத்தனை சஞ்சயன் இலிங்கப் பிரதிட்டை செய்ததாகக் கூறுகிறது. வராக மிகிரரால் பிருகத் சங்கிதையில் குஞ்சர என்று குறிக்கப்பட்டுள்ள தென்னிந்திய ஊர் அதுவே என்று கருதப்படுகிறது. மற் ருெரு கல்வெட்டு அகத்தியர் உருவம் பிரதிட்டை செய் யப்பெற்றதாகக் கூறப்படுகிறது. அகத்தியர் வழிபாடு மிகுந்தது தென்னிந்தியாவிலேயே. இவ்வாறு இந்தோனீசி யாவுக்குத் தென் இந்தியாவிலிருந்து சென்றவை இந்து மதமும் நாகரிகமுமாகும்.

இந்து மதக்கோயில்கள் பெரும்பாலும் காணப்படு வது 8,800 அடி உயரமுள்ள தயாங் (Dieng) lfi-gló) யிலாகும். அங்குள்ள ஐந்து கோயில்களும் மாமல்லபுரத் திலுள்ள கோயில்களைப் போலப் பஞ்சபாண்டவர் பெயரால் காணப்படுகின்றன. ஆயினும் இவை அனைத் தும் சிவ வழிபாடுடையனவே. இக்கோயில்கள் திரா விடச் சிற்ப முறையைத் தழுவியவையாகும்.

  • கலைக்களஞ்சியம்-தொகுதி 1, பக். 740-1.