பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 53

பாலக் கெளதமஞர் என்று சிறப்பித்து வழங்கினர் என்று கூறுவர். ஆயினும், மூன்ரும் பத்துப் பாடல்களைத் தவிர, புலமை நலங் கனிந்தொழுகுந் தன்மையவாய் இவர் பாடிய வேறு பாடல்களைச் சங்க இலக்கியத் தொகுதியி னுள் காணக்கூடவில்லை. கருத்து வேறுபாடின்றிப் பாலைக் கெளதமஞர் பாடியனவாகவே இன்று நாம் நம்பக்கூடிய பாடல்கள் பதிற்றுப் பத்திலுள்ள மூன்றும் பத்துப் பாடல்களே. இப் பத்துப் பாடல்களும்-24 அடிகளும்இல்லையானல், நாம் ஒரு பெருவேந்தனப்பற்றிய செய்தி களுள் எதையும் அறிந்திருக்க மாட்டோம்; அவ்வாறே பாலைக்கெளதமஞர் என்ற சிறந்த சான்ருேரைப் பற்றி யும் ஒரு சிறிதும் தெரிந்திருக்க மாட்டோம் இதை எண்ணும்போதே நம் மனத்தில் ஒரு வகையான அச்ச மும் பக்தியும் கலந்து தோன்றுகின்றன அல்லவா?

பதிற்றுப்பத்தும் அதன் பழைய உரையும் தமிழ் மக்கட்குக் கிடைத்த அழியாப் பெருஞ் செல்வம். அச் செல்வத்தை உடைமையாலேயே நாம் செல்வர்கள்’ என்ற இறுமாப்போடு வாழலாம். அச்செல்வத்தின் பெருமையை நமக்கு முதன்முதலாக எடுத்துக்காட்டிய பெருமை காலஞ்சென்ற தமிழ்க்கடலாகிய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களையே சாரும். அப்பெரி யார்க்கும், அவர் பதிப்பித்த அந்நூலின் துணைகொண்டு சங்கத் தமிழின் வரலாற்றுச் சிறப்பை வையகமெல்லாம் அறியுமாறு, சேர வேந்தர் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் எழுதிய அறிஞர் திரு. கே. ஜி. எஸ். ஐயர் அவர்கட்கும், அண்மையில் பதிற்றுப்பத்துக்கு விளக்க உரை கண்டு

1. (1) பாடினுேர் வரலாறு : பதிற்றுப்பத்து டாக்டர் உ. வே. சா. பதிப்பு (1941), பார்க்க.

(i) புறநானூறு-இளவை சு. து. பதிப்பு, பக்கம்-335 பார்க்க.