பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் 葱外

வரை மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. அதன் விளைவாக எழுத்து, சமயம், அரசியல் முறை, சட்டம், சோதிடம், மருத்துவம், இலக்கியம், சிற்பம், உலோக வேலை, பட்டு நெசவு ஆகிய துறைகள் அனைத்திலும் மலாயா மக்கள் இந்தியாவிற்கே பெரிதும் கடமைப்பட் டுள்ளார்கள். "இவ்வுண்மையை ஆங்கில மொழியிலுள்ள சிறந்த கலைக்களஞ்சியமாகிய என்லைக்கிளோபீடியா பிரிட்டானிக்காகவும் தடையின்றி ஏற்றுக்கொள்கிறது. மலாயா மொழியின் தலைசிறந்த நூலை எழுதியவரே தமிழ் இரத்தத் தொடர்புடையவராய் இருக்கக் காண்கிருேம்."

இவ்வாறு பெருங்கடலாலும் பிரிக்க முடியாத வகை யில் மலாயா மக்கள் வாழ்க்கையில் தமிழின் செல்வாக் கும் பல்லாற்ருனும் ஊடுருவி இருந்தமையால், அம் மக்களின் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் மிகப் பலவாக இடம் பெற்றிருத்தல் இயற்கை. ஆல்ை, தமிழ் வழக்குச் சொற்கள் அனைத்தும் தமிழ் வேர் உடையன அல்ல. அவற்றுள் சில பல வடமொழி வேர் உடையன வாய் இருத்தல்கூடும். ஆயினும், அவை பெரும்பாலும் "வடவெழுத்து ஒரீஇ தமிழொலி மரீஇத் தமிழ்-தமிழர் வாழ்வில் கலந்தே மலாயாவிற்குப் பயணமாயின என் பதை மறத்தல் இயலாது. அவ்வாறு பெரும்பாலும் "திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழர் வாயிலாக

4. Encyclopaedia Brittanica (1960)—Vo}. 14, pp. 711, 719

7愛雪.2。

2. (i), sir Richard Winsted-Malaya & its history-p. 21.

(ii) ,, , , –The Malayas—A cultural his.ory

1ទំឲ0–pp. –2, 3. தமிழ் வழக்கே பெருத வடமொழிச் சொற்களும் பல வாக மலாய் மொழியில் உள்ளன,