உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலுறுநபி வாய்மொழி று மாட்சிமைப்பட்டவர். அல்லாகுத் தஆலா நேரில் அவருக்கு சுல்தானுல் ஆரிபீன் என்று பட்டஞ்சூட்டினான்" என்று இவ்வளவும் சொல்லிவிட்டு வாய்மூடி யிருந்து, சற்று நே ரத்திற்குப்பின் மறுபடியும் சொல்கின்றார்கள். சைகு ஆட் “ஷஹாபுத்தீனே, இன்னும் கேட்பீராக, சையிது மு கியித்தீன் அப்துல் காதிறு ஜைலானி யனர்களின் ஆட்சியும், சைகு அபாஇஸ்ஹாக்குல் காஜஜ்வானயவர்களின் ஆட்சி யும், தாஜ பல் ஆரிபீன் அபுல்வபா அவர்களின் ஆட்சியும், மன்ஸ ப்புனு அபூபக்கரும் றபாஇ யவர்களின் தியும், சைகு மஉறாபுல் கர்சீ யவர்களின் ஆட்சியும், சையிது யஹ்யா மஉஷுக்குல்லா அவர்களின் ஆட்சியம், சையி த. அகுமதுல்கபீறு அவர்களின் ஆட்சியும் இடையில் ந டைபெறாமல் நிற்கமாட்டா; இனியும் முடியும் அள வும் இவர்களின் ஆட்சி நிலைத்திருக்கும்! இவர்களைப்பின் பற்றினேக்கு இவர்களில் நின்று அருள் சுரந்துகொண் டிருக்கும். இதை நீர் நம்புவீராக” என்று கூறினார்கள். நபி கிலுறு அலைகிஸ்ஸலா மவர்கள் சொன்ன இவ்வரு மைச்சொற்களை ஷஹாபுத்தீன் ஸஹ்ரவர்தி பவர்கள் கேட் டுக் களிகூர்ந்து, நாயகமவர்களை ஒப்பற்றவர்கள் என்று விசுவாசித்து, அவர்கள்மீது மிகவும் விருப்புள்ளவர்களா யிருந்தார்கள். கிலுறுநபி வாய்மொழி இவிற்று. 12 ககூ