பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

பட்டுக்கோட்டையில் பிறந்து, தஞ்சையில் இரப்பு (பிச்சை) எடுத்துக்கொண்டு அலைந்து, காஞ்சியில் ஒதுங்கிய ஒரு ஊசைப் பார்ப்பான் லோக குரு ஆகிவிட்டான். அவனின் வேதமதப் புராணப் புளுகுத் தொகுப்புகளுக்குத்தான் தெய்வத்தின் குரல் என்று பட்டம் சூட்டுகின்றார்கள். சங்கராச்சாரியின் குரல் தெய்வத்தின் குரல் என்றால் எங்கள் குரல் என்ன பேயின் குரலா? நீ தெய்வம் என்றால் எல்லோருக்கும் சோறு போடு பார்க்கலாம்.

உச்சக் கட்டம்:

பெரியார் ஊட்டிய தன்மான உணர்வால் தமிழினம் தலைதூக்கத் தொடங்கிய அதே வேளையில், தலைதூக்கும் தமிழினத்தின் மேல் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பாதந் தாங்கிகளும் சம்மட்டியடிகளைக் கொடுத்துக் கொண்டுதான் உள்ளனர். அதன் உச்சக் கட்டம்தான் இன்று தமிழ்நாட்டில் ஆர்.எசு.எசு. இயக்கம் தலைகாட்டுவதும் அதற்குச் சங்கராச்சாரியும் ஏனைய பார்ப்பனர்களும் அணிவகுத்து ஆதரவு காட்டுவதும் ஆன இன்றைய இழிநிலை!

தமிழினத்திற்குப் பாடுபடுபவனைப் பாடுபட நிற்பவனைப் பார்ப்பான் எதைச் செய்தாகிலும் தனக்கும் தன் இனத்திற்கும் உரிய அடிமையாக ஆக்கி வைத்துக் கொள்வான். பார்ப்பான் அவர்களிடம் நேரே சென்று ஆசைமொழி பேசுவான். முடியாத பொழுது தன் மனைவியை அனுப்பிப் பேச வைப்பான்; அதிலும் முடியாத போது தன் மகளை அனுப்பிப் பேச வைப்பான். இப்படியாகத் தன்னால் அடிமையாக்கி வைத்துக்கொள்ளப்பட்ட தமிழனைப் பார்ப்பான் எப்படியும் புகழ்ந்து உயர்த்திக் காட்டுவான். அப்படி உயர்த்திக் காட்டித் தனக்கு, தன் இனத்திற்கு உழைப்பவனாக ஆக்கிக் கொள்ளப்பட்ட ஒருவர்தாம் கண்ணதாசன். கண்ணதாசனை எப்பொழுதும் அவாள்கள் மாதொருபாகனாக (அர்த்தநாரீசுவரன்) ஆக்கி வைத்திருந்தனர்.

எழுத்துக் குப்பை

கண்ணதாசன் தமிழ் இனத்தை அடிமைப்படுத்தப் பார்ப்பனர்களுக்கு மனநிறைவை உண்டாக்க எழுதித் தள்ளிய குப்பை நூல் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’

இந்து மதத்தில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது? வேறு மதங்களில் ‘அர்த்தம்’ இல்லையா? புத்த மதத்தில் ‘பொருள்’ இல்லையா? இசுலாம் மதத்தில் ‘பொருள்’ இல்லையா? கிறித்துவ மதத்தில் ‘பொருள்’ இல்லையா? இந்துமதக் கயவர்களே உங்கள்