பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

279

தொண்ணூறு முறைகள் மாநில அரசுகள் கவிழ்க்கப் பட்டுள்ளன. உலகெங்கும் நடைபெறாத அரசியல் கொடுமை இது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இங்குள்ள வேற்றுத் தேசிய இனத்தவர்கள் எவரும் அடையாத கொடுமைகளைத் தமிழினம் மட்டுமே அடைந்துவருவதை நாம் - குறிப்பாகத் தமிழர்களாகிய நாம் உணர்ந்தே ஆகவேண்டும். இந்த நிலைக்கும் பலவேறான காரணங்கள் உண்டு. இந்தியாவில் ஆரியப் பார்ப்பனர்களை மொழியாலும், இனத்தாலும், கலை, பண்பாடுகளாலும், மரபாலும், ஆட்சியமைப்பாலும், மதத்தாலும், சாதியமைப்புகளாலும் நேரடியாக எதிர்க்கின்றது தமிழ்த் தேசிய இனம் ஒன்றுதான். வேறு தேசிய இனங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையிலோ பலவகையிலோ ஆரியத்துடன் இணைப்பும் பிணைப்பும் உடையனவாகவே உள்ளன. எனவே ஆரிய எதிர்ப்பினை அவை எந்த ஒரு கோணத்திலும் காட்டுவதில்லை.

இந்நிலையில்தான் இங்குத் தேர்தல்கள் அடிக்கடி வருகின்றன. தேர்தலில் மாநிலக் கட்சிகள் வென்றால் அவற்றின் மேல் ஏதாவது ஒருசில காரணங்களைக் காட்டித் தில்லியில் உள்ள பார்ப்பனிய வணிக ஆட்சி அவற்றைக் கவிழ்த்துவிடுவது இயல்பாகி விட்டபின் தேர்தல்கள் நடப்பதிலேயே பொருளில்லை. ஆனால் மக்களையும் பிற நாடுகளையும் ஏமாற்றி, இந்தியாவில் நடப்பது குடியரசாட்சி தான் என்று நம்ப வைப்பதற்காகவே, கோடிக்கணக்கான பொருளைச் செலவிட்டுத் தேர்தலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது தில்லி ஆட்சி.

எஃது, எவ்வாறாயினும், தொன்று தொட்டுத் தமிழினம் பார்ப்பனியத்தாலும், இந்தியா தன்னுரிமை பெற்றபின் வட நாட்டாராலும், அரசியல், பொருளியல், குமுகவியல் முதலிய அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டே வந்திருக்கின்றது. இந்நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும், திராவிட மரபு என்னும் பெயரால் ம.கோ. இராமச்சந்திரனாலும், அதன்பின் அவர் பெயரைச் சொல்லித் தம்மை வலிமைப்படுத்திக் கொண்ட செயலலிதாவாலும் இன்னும் தமிழினம் ஏமாறியே வந்து கொண்டுள்ளது. இனிமேலும் இத்தகையவர்களால் தமிழினம் ஏமாறாமல் ஓரளவு விழிப்படைந்திருக்கிறது என்று கருத இடம் உண்டு. தமிழின இளைஞர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பார்த்துத் தமிழின உணர்வு பெற்று வருகிறார்கள் என்றும் ஒருவாறு கூறலாம். எனவே செயலலிதாவே தமிழினத்திற்கு