இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
62 ஆரியராவது திய தமிழ் இலக்கியங்களிலும் இந்தி யாவை ஆரியநாடு என்று அநேக இட களில் சொல்லப்படுகிறது. சுப்பிரமணிய பாரதியாரும் "ஆரிய பூமியில், நாரியரும் நர, சூரியரும் சொலும்,வீரிய வாசகம் வந்தேமாதரம்' " என்று பாடு கிறார். எனினும் ஆரியர்', 'திராவிடர் என்ற இரண்டு பதங்களும் தமிழுக்கு அன்னியமானவை. தமிழ் இலக்கியங் களில் எந்த இடத்திலும் தமிழனை திரா விடர் என்று சொன்னதில்லை. தமிழன் தன்னை 'திராவிடன் என்று சொல் லிக்கொண்டால் அவன் கூசாமல் தன்னை 'ஆரியன்' என்றும் சொல்லிக் கொள்ளலாம். யாரோ ஒருவர் நம்மை என்னவோ என்று கூப்பிட்டால் அந்த "என்னவோ" என்பது நம் பெயராகி விடுமா? உதாரணமாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவனை நாம் ஆங்கிலேயன் என்று சொல்லுகிறோம். இதனாலேயே அவன் தன்னை 'ஆங்கிலேயன்' என்று