பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வட இந்தி... கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை

99


“பாண்டியா” என்ற சொல்லை, அவர்களுக்கு நன்கு தெரிந்த பாண்டவர் என்ற சொல்லாகக் கருதுவர்). எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், அணிகளால் ஒப்பனை செய்யப்பெற்று, யானைகளும், குதிரைகளும், பொதிநிறை வண்டிகளும் பின்தொடர் சிலோன் சென்றனர். இந்தக் கதை, வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான . மிகப்பழைய போக்குவரத்து, தொடர்ந்து இருந்தமைக்குச் சான்று பகர்கிறது. இது பாண்டியர்களும், வடநாட்டவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகா அந்நியர் அல்லர், மாறாக வழக்கமான நிகழச்சிபோல, பாண்டியர் மகள் ஒருத்தி, விஜயனுடைய கைப்பிடிக்க, ஆணையிட்டுப் பெறுமளவு ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர் என்பதையும் உறுதி செய்கிறது. அர்ச்சுனன், சித்ராங்கதா வையும் மணந்து கொண்டு, நாகர் மகள் உலூபியோடு, தற்காலிக உறவுக்கும் வழி செய்திருந்தது போலவே, விஜயனும், இடையில் கைவிடக்கூடிய ஒரு திருமணத்தை ஒரு யக்கினியாம் "குவண்ண" என்பவளோடு அவன் கொண்ட உறவு, போன்றதன்று. மாறாக, புதியாள் ஒருத்தியோடு, மேற்கொண்ட நிலையிலாக் காதல் திருவிளையாட்டே

“ததொ ஸோ விஜயொ ராஜ பண்டுராஜஸ்ஸ துஹிதரம் மஹதா பரிஹாரெண மஹேசித்தே ப்ஹிஸேசயி
-மகாவம்ஸோ - 7:72”