பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

175


விட்டது. அது, கார்மேனியன் (Karmanian) பாலையைத் தொட்டுச் செல்வதாகி, அங்கிருந்து மெஸபடோமியா வழியாக அன்டியோக் (Antioch) நகருக்கும் சென்றது. இதன் முக்கிய விளைவு, பட்டு, முதன்முதலாக, மேற்கு நாடுகளைச் சென்றடைந்தது. "கிரேக்கர்கள், பட்டை அலெக்ஸாண் டரின் படையெடுப்பு மூலம் அறிந்து கொண்டனர் எனக் கருதப்பட்டது. ஆனால் அது அதற்கு முன்பே, பர்ஷயா மூலம், அது அவர்களை அடைந்திருக்கக்கூடும்." (Schoff's Periplus. P. 264.) இந்நிலவழி வாணிகம், தாரியஸுக்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்துவிட்டது. எகிப்தை வெற்றி கொண்ட பின்னர், அலெக்ஸாண்டர், இந்தியாவுக்கும் ஐரோப்பியாவுக்கும் இடையில், பெரிய வாணிக நிலையமாக விரைவாக வளர்ந்து விட்ட அலெக்ஸாண்டிரியாப் பெருநகரை : உருவாக்கினான். பின்னர், அம்மாவீரன் டயர் நகரைச் சூறையாடி அழித்து அதன் பண்டை வாணிகத்தையும் பாழ்படுத்தி விட்டான். இது மேற்கு நோக்கிப் பெருகிக் கொண்டிருந்த இந்திய வணிகப் பெருக்கை ஓரளவு அணைபோட்டுத் தடுத்து விட்டது. அலெக்ஸாண்டர் இறப்பிற்குப் பிறகு, அஸரியாவைச் சட்ட திட்டங்கள் அற்றுப்போன குழப்பநிலை, ஆட்சிபுரியத் தொடங்கி விட்டது. பார்த்தியாவில், ஒரு புதிய பேரரசு எழுந்தது. சித்தியப் பழங்குடியினர், பாக்ட்ரியா (Bactria) மீதான, தம் திடீர்த் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். இந்நிகழ்ச்சிகள், நிலவழி வாணிகத்தில் அழிவுக்கு வழிவகுத்து விட்டன. இந்த விளைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, எகிப்தின் நலனுக்காகச் செங்கடல் வாணிக வளர்ச்சிக்கு, அருமுயற்சி எடுத்துக் கொள்ளுமாறு பிலடெல்பிஸுக்கு (Philadelphus) கி.பி. 285 - 246ல், அழைப்பு விடுத்தார். முதல் தாலமி, சூயஸ் கால்வாய், ஓரளவு திறக்கப்பட்டு, வாணிகப்போக்கு வரவிற்கு வழி செய்யப்பட்டது. வணிகச் சாத்து செல்லும், தங்கும் இடங்களுக்கும், குடிநீர்க் கிணறுகளுக்கும் வசதி செய்து தரப்பட்ட, பல்வேறு வழித்தடங்கள், கடலுக்கும், நைல் நதிக்கும் இடையே திறக்கப்பட்டன. அவ்வழித்தடங்கள் முடியும் இடங்களிலெல்லாம், துறைகளால்