பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

189


எல்லாம், பிற்கால இலக்கியங்களிலிருந்தது என்றாலும், அக்கால கட்டத்திலும், வடநாட்டில் பலதேவனுக்குக் கோயில் இல்லை. இவ்வெள்ளைக் கடவுள், தெற்கில்தான் முதன்முதலில் எழுந்தான் என்ற முடிவிற்கு வலிவூட்டுகிறது. தமிழ்நாட்டின் சில சாதியரிடையே 'வெள்ளையன்", வெள்ளான்" என்ற பெயர்கள், இன்றும் பரவலாக இடம் பெற்றுள்ளன. வெள்ளைக் கடவுள் வழிபடப்பெற்று, அவன் பெயர், அவனை வழிபடுவார் மக்களுக்கு இடப்பட்ட காலம் தொட்டு வழக்கில் வந்திருக்க வேண்டும்.) இக்கோயில்களே அல்லாமல் கிருஷ்ணன், பலதேவன் ஆகிய இருவரின் தெய்வத் திருமேனிகள் அடுத்தடுத்து இடம் பெற்றிருக்கும் கோயில்களும் உள. அத்தகைய கோயில்களுள் ஒன்றாகிய, மதுரைக்கு வெகு தொலைவில் இல்லாத திருமாலிருஞ் சோலைக்கோயில், பரிபாடலில், பதினைந்தாவது பாட்டில் மிக விரிவாக விளக்கப்பட்டுளது. அது, எடுத்துக்காட்டுவதற்கு இயலா, நெடும் பாட்டு, மேலும் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் காலத்திற்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அப்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் பலதேவன் தெய்வத்திருமேனி, இப்போது காணாமல் போய்விட்டது. திருமால் வழிபாட்டாளரின் மதிப்பீட்டில், பலதேவன், குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட காலத்தில், அக்கோயில் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்டிருக்கக் கூடும். இன்றும் அழியாமல் இருக்கும் ஒருசில கோயில்களில், பலதேவன் திருமேனி, இன்றும் நிற்கிறது. அவை, பிற்காலச் சமய வெறியர்களின் அழிவிலிருந்து தப்பிவிட்டன போலும்.

அந்த இணைந்த வழிபாட்டு முறை, அர்மீனியாவுக்கு வடநாட்டிலிருந்து சென்றதா, தென்னாட்டிலிருந்து சென்றதா என்பது விடையிறுக்க முடியாத நிலை இருக்கும்போது, அது கொடிய வன்முறைச் செயல் ஒன்று மூலம் அழிவுற்றுப் போய்விட்டது. கிறித்துவச் சமயப் பிரசாரகர், முனிவர் கிரிகோரி என்பவர் (St. Gregory) கி. பி. நான்காவது நூற்றாண்டில், புறச்சமயத்திற்கு எதிரான தம்முடைய கொடிய வெறுப்பு காரணமாக, விஷப் (Vishap) எனும் இடத்திலிருந்த இந்தியர் குடியிருப்பிற்கு எதிராகக் கிறித்துவப்