பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் வெளிநாட்டு வாணிகம்

61


கல்வகைகள் வரப்பெற்றன. "கி.மு. 1798-1167 இல் இருபதாவது அரசர் குலத்தில் மூன்றாம் ரமேஸஸ் (Rameses III) என்பான் ஆட்சியன் கீழ், நாட்டின் செல்வவளம் அனைத்தும் அமோன் (Amon) என்பான் மடியில் கொட்டப்பட்டு விட்டதுபோல் காணப்பட்டது. பாபிரஸ் ஆரிஸ் என்பார், (Papyrus Haris) அமோன் என்பான் கல்லறைக்காக "பாபிரஸ் ஆரிஸ்" என்ற பெயரில், தொகுத்து இயற்றிய, தம்முடைய நன்கொடை அறக்கொடைகளின் சிறந்த ஆவணத்தில், ஆண்டுதோறும், "பொன், வெள்ளி, மணிக்கல், உயர்மெருகு ஏற்கும் பச்சநிைறக் . கனிப்பொருள், மதிப்புமிக்க மாணிக்க வகைகள், செம்பு, சிறந்த நார்மடியால் ஆன அரச உடைகள், லவங்கம் 246 நாழி" என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. (இம் மேற்கோள்கள், திருவாளர் பிரஸ்டெட் (Breasted) என்பாரின் எகிப்தின் பழைய ஆவணங்கள் (Ancient Records of Egypt) என்பதிலிருந்து எடுக்கப்பட்டன. (Schoffs periplus. p. 121-122) மேலே காட்டிய மேற்கோள்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் பொருள்களில், கருங்காலி, பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்தே சென்றது என்பது, ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. மணிக்கல் உட்பட, மதிப்புமிக்க கல்வகை கள், பிற்காலத்தில், மேற்கத்தவர்களால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது பின்னர் விளக்கப்படும்.

இவ்வாணிகம், பெரும்பாலும் 18வது அரசர் குல ஆட்சியில், செல்வ வளங்கொழித்திருந்த நாட்களில், எகிப்தோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்த அனைத்து நாடுகளும், ஆமோன் அவர்களுக்கு வழிபாடு செலுத்துவான் வேண்டி வந்து, அலைமோதிய காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும். எகிப்தியர்களால், "லாப்பிஸ் லாஸ~லி " (Lapis-Lazwli) என அழைக்கப்படும் நீலமணிக்கல், எகிப்தியர்களால் நன்மிகப் பழங்காலத்திலிருந்தும், அஸிரியர்களால் அதனினும் பிற்பட்ட காலத்திலிருந்தும் அறியப்பட்டது 'என்கிறார் திருவாளர் குட்சைல்டு (Good Cuild) என்பார்.

சலாமிஸ்ஸின் (Salarmis) மதகுருவாம் எபிபணியாஸ் (Epiphanias) என்பார், மோஸஸுக்கு (Moses) வழங்கிய சட்ட