ஆருயிர் மருந்து
95
நாட்டிலிருந்து கம்பளிச் செட்டியின் கலம் வந்து தங்க,அச்செட்டியிடம் சிற்றரசனை ஒப்புவித்து, சோழ மன்னனிடம் அவனை ஒப்படைக்க அவனிடம் சொல்ல,அவ்வாறே அக்கம்பளச்செட்டியும் அரசிளங்குமரனை
யேற்றிக்கொண்டு கடல்வழிச் செல்லுநாள் அக்கலம் கவிழ்ந்தது. அதிலிருந்து தப்பிச்சென்ற சிலர் அரசனிடம் அக்கப்பலில் வந்த சிற்றரசன் கலம் கவிழ்ந்த காரணத்தால் மாண்டான் என்று கூறினர். அதுகேட்ட
மன்னன் நன்மணியிழந்த நாகம் போன்று உளம் வருந்தி, கானலும் கடலும் கரையும் தன்மகனைத் தேடித் திரிந்தான். அதனால் அவ்வாண்டு இந்திரவிழா நடைபெறவில்லை. அதை அறிந்த மணிமேகலா
தெய்வம் பொறாது அந்த அழகிய புகாரினைக் கடல்கொள்ளச் செய்துவிட்டது. உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி பிள்ளையின் வருத்தத்தால் தனியனாயினன். மாதவியும் சுதமதியும் அறவணவடிகளும்
வருத்தம் ஒன்றுமின்றி வஞ்சியுள் புக்கனர். இவ்வளவையும் கூறி, மேலும் அறிய வேண்டியவற்றை வஞ்சியுள் சென்று, அறவணவடிகள்பால் கேட்டுணர்ந்து
கோள்ளுமாறு மணிமேகலைக்குப் பணித்து தீவதிலகை வான் வழிப்பறந்து சென்றுவிட்டாள்.
வஞ்சிக்குச் செல்லு முன்
தீலதிலகை சென்றபின் ஆபுத்திரன் அவள் காட்
டிய இடத்தில் தோண்டி, தன் முந்தைய எலும்புகளைக் கண்டு கருத்தழிந்தான். மயங்கியிருந்த மன்னனை விளித்து, மணிமேகலை அவ்வாறு வருந்துதல் தகாது
என்று கூறி, அவனை அத்தீவினுக்கு அழைத்து அவன் பழம் பிறப்பை எல்லாம் உணரச்செய்து உலகம் உள்