பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

102 ஆருயிர் மருந்து நான் இங்கே வந்தேன். வந்தபின் இங்குள்ள முனிவர் மூலம் காவிரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்படும் என்ற செய்தியை அறிந்து இங்கேயே தங்கிவிட்டேன்' என்று தான் வஞ்சியில் தங்கிய வரலாற்றையும் கார ணத்தையும் எடுத்து விளக்கினார். மேலும் புத்த ஞாயிறு தோன்றும் காலை கோவலனையும் கண்ணகியை யும் போன்று,தானும் நல்லுபதேசம் பெற்று நிர்வாண மடையப்போ தலையும் கூறினான். பின்னர் அறவண. வடிகள் மாதவி சுதமதியுடன் காஞ்சிநகர் சென்றதை யும், அதுவே அறமுரைக்க ஏற்ற இடம் என்பதையும் எடுத்து விளக்கினன். மேலும் காஞ்சிமா நகரம் அக் காலை மழை இன்றிப் பஞ்சத்தால் வருந்துவதைக் கூறி, அவள் உடனே அந்நகர் சென்று அமுதசுரபியினால் அனைவரையும் உண்பித்தல் கடன் என்பதையும் வற் புறுத்தினான். உடனே மணிமேகலை தன் பாட்டனாரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு, வஞ்சி நகரின் மேலை வாயில் வழியாக வந்து வான் வழிப் பறந்து வடக்கு நோக்கிக் காஞ்சிநகர் காணப் புறப்பட்டாள். காஞ்சியை அடைந்தாள் வான் வழிப் பறந்துவந்த மணிமேகலை விளைவற்று வறிதாகக் கிடந்த காஞ்சிமா நகரம் வந்து சேர்ந்தாள். அதன் சிறப்பெல்லாம் முன்னமே அறிந்த மணிமேகலை அப்போது அதுபெற்றிருந்த வாட்டத்தைக் கண்டு வருத்தமுற்றாள். பின்னர் அந்நகரின் நடுவே இறங்கி அந் நாட்டு மன்னன் இளங்கிள்ளியால் கட்டப்பட்ட புத்தர் ஆலயத்தை வலம்வந்து வணங்கி அதன் தென் மேற்கேயுள்ள அழகிய ஒரு சோலையில் சென்று தங்கி யிருந்தாள். அவள் வரவை அறிந்த அந்நகரத்தான் }