பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

4 ஆருயிர் மருந்து 101 அறத்தைக் கேட்டதையும், அவற்றுள் ஒன்றும் தன் மனதைப் பற்றாமையால், பௌத்த சமயத்தைப் பற்றி அறவணரிடம் உண்மைகேட்டறிய அவ்விடம் வந்ததை யும் எடுத்துரைத்தாள். அவற்றைக் கேட்ட மாசாத்து வான் 'நின்னை என் நல்வினைப் பயன் கொல் நான் கண் டது' என்று மகிழ்ச்சிப் பெருக்கால் கூறினன். மேலும் கோவலனும் கண்ணகியும் கொடுந் துயருற்றதைக் கேட்டு, தான் செல்வம் துறந்து மாதவத்தை மேற் கொண்டதைக் கூறி, மேலும் அவன் அந்நகருக்கு வந்த காரணத்தையும் கூறினான். முன்னொரு காலத்து இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் தன் மனைவியோடு இச்சோலையில் தங்கி யிருந்தான். அப்போது இலங்கைத் தீவில் உள்ள சம னொளி மலையைத் தரிசித்துக்கொண்டு வந்த சாரணன் ஒருவன் வான் வழி வந்து இச்சோலையுள் தங்கினன். அவனைக் கண்ட அரசனும் அரசியும் வணங்கி அருளுப தேசம் செய்ய வேண்டினர். அச்சாரணனும் பிறப்பால் வரும் துன்பமும், அஃது இன்மையால் பெறும் இன்ப மும் கூறி வாழ்வாங்கு வாழவேண்டிய அறநெறியை எடுத்து விளக்கினன். அவற்றைக் கேட்ட அரசனும் அரசியும் நிறைவெய்தி அமைதி யுற்றனர். அவற்றை அரசனுடைய காதற் பாங்கனாக அவனை விட்டு நீங்காது அயலிலிருந்த உன் தந்தையின் ஒன்பதாந் தலைமுறை யில் வாழ்ந்த கோவலன் என்பான் கேட்டு, மனம் தெளிவுபெற்று, தன் செல்வத்தை யெல்லாம் ஏழே நாட்களில் இரவலர்க் களித்துத் தவத்தை மேற்கொண் டான். அத்துடன் புத்ததேவனுக்குச் சைத்தியமும் கட்டுவித்தான். அவன் கட்டிய கோயிலைக் காணவே