பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து தனித்தனியே கண்டு அவ்வவர்தம் உண்மைகளை முறை யாகக் கேட்டாள். அவற்றின் உண்மைகளை யெல்லாம் அறிந்த மணிமேகலை சில காலம் வஞ்சியிலேயே தங்கி யிருந்தாள். 100 மாசாத்துவானைக் கண்டாள் அன்னையை வணங்கி விடை பெற்றுக்கொண்ட பிறகு வஞ்சி நகரின் பல்வேறு வளங்களைக் காணவும் அறவணவடிகளைத் தேடிப் பார்க்கவும் விரும்பினாள் மணிமேகலை. உடனே வஞ்சியின் அகநகர் புகுந்து அதன் அழகுகளை யெல்லாம் கண்டுகொண்டே சென் றாள். பல்வேறு வகைப்பட்ட மக்கள் வாழ்கின்ற பகுதிகளையும், அவற்றின் எழிலையும் ஏற்றத்தையும் கண்டாள். பல கடைத்தெருக்களையும், அழகார் பிற தெருக்களையும் கண்டு கொண்டே சென்றாள். இவ் வாறு பல்வேறு இடங்களையும் பார்த்துக்கொண்டு வந்த மணிமேகலை இறுதியாகப் பல தவசிகள் தங்கும் இடங்களையும் கண்டாள். அங்கு புத்த தேவனது அறம் கூறும் அடியவர் வாழ்ந்த இடம் அறிந்து அங்கே அறவணவடிகளைக் காணக்கூடும் என்ற காரணத்தால் அவ்விடத்தை விரைந்து அடைந்தாள். சென்ற விடத்தே அறவண அடிகளைக் காண வில்லை. ஆயினும் அவள் பாட்டனும் கோவலன் தாதையுமாகிய மாசாத்துவான் அங்கு ஒருசார் தவம் செய்துகொண் டிருத்தலைக் கண்டாள், அவரைக் கண்ட வுடன் வணங்கித் தன் வரலாறு முழுவதும் கூறி, மணி பல்லவம் விட்டு அந்த நகர் வந்து அன்னையை வணங் கியதையும், பின் வேற்றுருவோடு அனைவர்தம்