பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து 99 வஞ்சியுள் புகுந்தாள் வஞ்சியில் புகுந்து நல்ல சமயத் தலைவர்களை அடைந்து, அவர்தம் சமயநெறிகளைக் கேட்க இருக் கின்ற காரணத்தால், தான் அவ் வுருவொடு செல்லின் பயன் தராது என்று கருதி, தன் மாற்றுரு மந்திரத்தை ஒதி, மா தவன் வடிவுகொண்டாள் மணிமேகலை. பின் னர் அந் நகரிலுள்ள பல்வேறு சிறப்புக்களை யெல்லாம் கண்டு செங்குட்டுவன் வீற்றிறிருந்து செம்மை முறை யில் ஆளும் நலங்களைப் போற்றி அவனது வடநாட்டு யாத்திரையையும், இமயம் சென்று தன் அன்னைக்குக் கல்கொணர்ந்த சிறப்பையும் கருதித் தங்கியிருந்தனள். சமயங்களைக் கேட்டு அறிந்தாள் வஞ்சி நகரம் மிகப்பெரிய தொன்றாகும். செங் குட்டுவன் காலத்து அது சிறந்த முறையிலே செழித்து வளர்ந்தது. அதில் நல்ல வள மும் வாணிபமும் பொருந்தியதோடன்றி நூலறிவும் வாலறிவும் பெற்ற சமயத் தலைவர் பலர் அங்கே வீற்றிருந்தனர். சைவரும் வைணவரும், வை திகரும் சமணரும், பௌத்தரும் பிற ரும் பல்வேறு வகைப்பட்ட தத்தம் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டும், வாதம் புரிந்துகொண்டும் வஞ்சி நகரில் தங்கியிருந்தனர். செங்குட்டுவன் சைவ சமயத் தைச் சார்ந்தவன் ஆனபோதிலும், சமய வேறுபாட் டைக் கருத்தில் அவன் கொள்ளாத காரணத்தால் எல்லாச் சமயங்களுக்கும் ஏற்றம் தந்து, அவ்வச் சமயத் தலைவர்களைத் தன் நகரில் இருத்தி அவர்கட்கு வேண்டிய உதவிகளையும் செய்தான். அறம் அறிய விரும்பிய மணிமேகலை ஒவ்வொரு சமயவாதியையும்