பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

98 ஆருயிர் மருந்து என்று மதுராபுரித் தெய்வம் கூறியதைச் சொல்லி, அனைத்தையும் கேட்டபின்னும் அவள் சீற்றம் தணியா ளாய் மதுரையை எரித்ததையும் கூறினாள். கண்ணகியின் பிற்காலம் கண்ணகி தன் முன்னைச் செயலைக் கூறியபின், மேலும் அவள் பெற இருக்கும் பிறவிகளையும் கூறி னள். அப்போது அவளும் கோவலனும் தெய்வ உல கில் இருக்கிறார்கள் என்றும், எனினும் தான் கொண்ட கோபத்தின் காரணமாகிய வினையை அனுபவிக்க ஒரு காலத்தில் நிலத்தில் பிறக்கத்தான் வேண்டுமென்றும் கூறினாள். தானும் கோவலனும் உலகிடைப் பல்வேறு பிறவிகளில் பிறந்து இருவினை வயத்தில் பட்டு உழன்று வரவேண்டு மென்றும், பின்னர் நெடுநாள் கழித்து. மகத நாட்டுக் கபிலையம் பதியில் புத்த ஞாயிறு தோன்றி, தன் அருளுப தேசத்தால் உலகை நல் விளக் கம் செய்யும் காலத்து, அவர்களும் அவ்வருளுபதேசத் தைக் கேட்டு அதன் பயனாக நிர்வாண மடைவார்கள் என்றும் கூறினள். அவ்வாறு நிருவாண மடையும் நாள் நெடுந் தொலைவில் உண்மையின் அதுவரை உல கிடைப் பல சித்திகளைச் செய்துகொண்டிருக்கப் போவ தாகவும் கூறினள். மேலும் மணிமேகலையை நோக்கி அவள் அந்நகரில் பல்வேறு சமயக் கணக்கர் தம் வாதங்களைக் கேட்கப் போவதையும், எதிலும் பற்றுக் கொள்ளாது இறுதியில் புத்ததேவன் அடியைப் பற் றப் போவதையும் கூறி அமைந்தாள் கண்ணகி. தாய் கூறிய அத்தனையும் கேட்ட சேய் மணிமேகலை தன்னை மறந்து விம்மித முற்றாள். ர்