பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

வஞ்சியிலும் காஞ்சியிலும் தாயினைப் போற்றல் விசும்பு ஆறாகவந்த மணிமேகலை விரைவிலேயே சேரர்பெருமான் வஞ்சியை வந்தடைந்தாள். அவ்வூரி னைச் சென்று காண்பதன் முன்னமே தன் தாயாகிய கண்ணகியையும், தந்தையாகிய கோவலனையும் காண விரும்பி அவர்கள் தங்கியுள்ள கோட்டம் சென்று சேர்ந்தாள். சென்று கோவலனையும் கண்ணகியையும் வணங்கிப் போற்றினாள். பின்னர் கண்ணகியை நோக்கி தந்தை இறந்தவுடன் உடன் இறவாமலும், அன்றிக் கைம்மை நோன்பை மேற்கொள்ளாமலும் இருந்த தோடு மதுரைமா நகரையும் எரித்த காரணம் என் அப்போது சேயின் வினாவுக்கு விடைதர விரும்பினாள் கற்புடைக் கண்ணகி. னாள் மதுரைமா நகரை எரித்தபின் மதுராபுரித் தெய் வம் தன்முன் வந்து கூறிய நிகழ்ச்சிகளை யெல்லாம் எடுத்துக் கூறினாள். எனக் கேட்டாள். முன் கோவலன் முன்னைப் பிறவியில் பரதன் என்னும் அரசியற் பணியாளனாக இருந்து, ஒரு பாபமும் செய் தறியாத சங்கமன் என்பானை எதிரியின் ஒற்றன் என்று எடுத்துக் கூறிக் கொலைசெய்ய, அச்சங்கமன் மனைவி கணவனை இழந்த காரணத்தால் பதினான்கு நாள் வருந்திப் பின்னர் உயிர்விடுகையில், தமக்குத் தீங் கிழைத்தோர் மறுமையில் அத்தகைய துயரைப் பெறச் சபித்துச் சென்றதால் அப்பரதனே கோவலனாகப் பிறந்து, மதுரைத் தெருவில் கொலையுண்ணப் பட்டான் .