பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

104 ஆருயிர் மருந்து அச்சோலையிலேயே ஒரு புத்த பீடிகையை நிறுவுவித்து, தீவதிலகையையும் மணிமேகலாதெய்வத்தையும் வணங் குவதற்குரிய ஆலயங்களையும் அமைத்து, அவற்றிற் குரிய விழாக்களையும் அரசனைக் கொண்டு செய்வித்து அங்கேயே தங்கினாள். அவள் காஞ்சி நகரம் அடைந்த நாள் தொட்டு மக்கள் பசிப்பிணி நீங்கினர். நாட்டில் வசியும் வளனும் சுரந்தன. மணிமேகலை எல்லோரையும் வருக வென் றழைத்து, அனைவரையும் உண்பித்து வாழ்ந்து வந் தாள். அறவணரைக் காணல். மணிமேகலை காஞ்சி நகர் வந்திருப்பதைக் கேள்விப் பட்ட அறவணவடிகள் மாதவியோடும் சுதமதியோடும் அவள் தங்கிருந்த சோலைக்கு அவளைத் தேடிவந்தனர். வந்த அவர்களை வழிக்கொண்டழைத்து வணங்கிப் போற்றினள் மணிமேகலை. அவளை வாழ்த்தினர் அறவ ணவடிகள். பின்னர் பீலிவளைபெற்ற தன் மைந்தன் மறைந்த காரணத்தால் சோழன் இந்திரவிழாவை மறக்க, மணிமேகலா தெய்வத்தின் சாபத்தால் மாபெரு நகராகிய புகார் கடல்கொள்ளப்பட்டு அழிய, தானும் தாயாகிய மாதவியும், சுதமதியும் அவள்பொருட்டுக் காஞ்சி நகரம் வந்து தங்கியுள்ளதைக் கூறினர். மணி மேகலையும் நகர அழிவையும் பிறவற்றையும் மணிபல்ல வத்திலேயே தீவதிலகையின்பால் தான் கேட்டுணர்ந்த தையும், நேரே வஞ்சிசென்று கண்ணகியை வழிபட்ட தையும், பின்னர் மாற்றுருக்கொண்டு பல்வேறாய சம யக் கோட்பாடுகளையும் கேட்டு ஒன்றிலும் மனம்