உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆருயிர் மருந்து

105

பற்றாமையையும் கூறி, தனக்குப் பௌத்த தரும நெறியை உபதேசித்தருள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாள். அவரும் ஐயம் இன்றி அறிந்துகொள்க என்று பௌத்த சமயத்தினது உண்மைப் பொருளையும் அதன் நூண்ணிய கருத்துக்களையும் பிற நற்பொருள்களையும் நன்கு விளக்கமாக எடுத்துரைத்தனர்.

பாவை நோற்றாள்

பின்னும் அறவண வடிகள் தாம் அறிந்த பல் வேறு புத்தசமய உண்மைகளையும் அவளுக்கு எடுத்துக் காட்டினர். ஆதியிற் றோன்றிய புத்ததேவன் அறிவுறுத்திய நெறிகளையெல்லால் எடுத்து விளக்கினர். பின்னர் உலகில் துன்பத் தொடக்கம் நீங்காது பற்றிக் கொண்டே இருப்பதற்கான காரணங்களை யெல்லாம் ஆராய்ந்து எடுத்துரைத்தனர். பின்னர் உலக துன்பங்களாகிய

‘யாம் மேலுரைத்த பொருள்கட் கெல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்’

"நாம் மேலே கூறிய அனைத்து விஷயங்களுக்கும், காமம், வெகுளி, மற்றும் மயக்கம் ஆகியவை காரணமாக இருக்கும்."

என்று விளக்கிக் காட்டினார். அனைத்தையும் கூறி அவள் உள்ளத்தே ஞான ஒளி விளக்கை யேற்றுவித்தனர், உள்ளொளி பெருகப்பெற்ற பாவை மணிமேகலை, உலகம் ‘பவத்திறம் அறுவதாக’ என்று, நாடுவாழ வேண்டி அக்காஞ்சி நகரிலேயே நெடுங்காலம் அறமாற்றித் தவம் நோற்று வாழ்ந்து வந்தாள்.