பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

7


நடவாமலும் 'இருப்பதோடு, துறவியாகி, இளம் பெண்ணையும் அவ்வழியில் ஈர்க்கும் கொடுமை பற்றி ஊரார் கூறுவனவாகப் பல கூறினாள். அவற்றைக் கேட்ட மாதவி மனம் புழுங்கினாள். எனினும் தாங்கள் விழாவிடைக் கலந்து கொள்ள முடியாதென்றும், துறவு நிலையே தங்களுக்கு ஏற்றதென்றும் கூறினாள். அறவணவடிகள் தனக்குக் கூறிய அறவுரைகளையெல்லாம் எடுத்துக் கூறி, பிறவி பற்றி வரும் பெருந்துன்பங்களை விளக்கினாள். மேலும் தன் மகள் மணிமேகலையைக் கற்புடைச் செல்வியாம் கண்ணகியின் மகளாகவே கூறுகின்றாள். அத்தகைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை தவ வழியிற் செல்வாளேயன்றி அவ்வழிக்கு என்றும் வாராள் என உரைத்தாள். அனைத்தையும் கேட்ட வயந்தமாலை செய்வதறியாளாய்ச் சிந்தை தளர்ந்து, திரும்பிச் சென்று சித்திராபதிக்கு அனைத்தையும் உணர்த்தினாள்.

மாதவி வயந்தமாலையிடம் பேசிய அனைத்தையும் எவ்வாறோ கேட்டறிந்தாள் மணிமேகலை. அவள் கண்முன் மதுரை தெரிந்தது. அங்கே கொலையுண்ட தன் தந்தையாகிய கோவலனும், அச்செயலுக்கு ஆற்றாது அலமந்த அன்னை கண்ணகியும் தெரிந்தனர். அவர் தம் நிலையினையும், பண்பையும், சிறப்பையும் எண்ணி எண்ணி ஏங்கினாள் மணிமேகலை. கையில் புத்த தேவனுக்கென்று கட்டிய மாலை அப்படியே இருந்தது. அன்னையை எண்ணி ஆற்றாது அழுத கண்ணீர் புறப்பட்டு வழிந்து அம்மாலை மேல் விழுந்தது. அதைத் தூரத்தே இருந்து கண்ட மாதவி தன் மகள் வாடுவதைக் கண்டு அவள் துயரம் போக்க நினைத்தாள். தன்