பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

ஆருயிர் மருந்து


மேலாக அக்காலத்தே நாட்டில் பசியும் பிணியும் இல்லாது அகலுமாம். இவ்விழாச் சிறப்பையெல்லாம் முரசறைவோன் வாயிலாக அழகுபடக் காட்டுகின்றார் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார். அவர் தம் அடிகள் அறிந்து இன்புறத் தக்கன. அவற்றுள் அவ்விழா நாளிலே

‘பற்று மாக்கள் தம்முட னாயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
பசியும் பிணியும் பகையும் நீக்கி
வசியும் வளனும் சுரக்க’

என்று மக்கள் வாழ வேண்டிய நல்வாழ்வை நினைவுறுத்தும் அடிகள் என்றென்றும் போற்றப்பட வேண்டியன அன்றோ?

தனித்த நிலையில் தாயும் சேயும்

காவிரிப்பூம் பட்டினம் இவ்வாறு பேராரவாரத்தில் திளைக்கும் அதே வேளையில் மாதவியும் மகள் மணிமேகலையும் விழாநலம் காணச் செல்லாராய்த் தனித்துத் தம் மாளிகையின் ஓரிடத்தில் இருந்தனர். மணிமேகலை மாளிகையின் ஒருசார் மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்தாள். மாதவியோ இதே இந்திரவிழாதானே தன்னைக் கோவலனிடமிருந்து பிரித்தது என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள். அந்த வேளையில் சித்திராபதி அனுப்பிய வயந்தமாலை என்பாள் மாதவியிடம் வந்து அவள் சொல்லிய செய்தியைச் சொன்னாள். மாதவி தன் மகளுடன் இந்திர விழாவுக்கு வராமலும், அவர் தம் குல ஒழுக்கத்திற்கேற்ப