பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

5


விழா தொடங்கு முன் அரசரது முரசறைவோன் பட்டத்து யானைமேல் முரசினை ஏற்றி, நகர மக்கள் அனைவரும் அறியுமாறு முரசறைந்து, விழா தொடங்கும் நாளை அறிவிப்பான். அத்துடன் அவ்விழா எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்பதையும், விழாவின் குறிக்கோள் யாது என்பதையும் எடுத்துக் கூறுவான். அந்நாட்களிலே தேவர்களெல்லாம் அவர் தம் நாடு வறிதாகும்படி இங்கு வந்து தங்கி, விழாவிலே கலந்து கொண்டு மகிழ்ந்திருப்பார்களாம். பல பெரியோர்களும் அவ்விழாவிற் கலந்து கொள்வார்கள், விஞ்சையர் பல்லோர் தம்மை மறந்து அக் காவிரிப்பூம்பட்டினத் தெருவுதொறும் சுற்றித் திரிவார்கள். எங்கும் எதிலும் இன்பம் குடிகொண்டிருக்கும்.

நகர மக்கள் தத்தம் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதன் அறிகுறி யாது? தம்தம் வாயில்களைத் தூய்மை செய்து, அழகார் கோலமிட்டு, தோரணங்களும் வாழை முதலிய மரங்களும் நாட்டி, பூரண கும்பம் முதலியன வைத்துச் சிறப்புச் செய்வார்களாம். பல்வேறு வகைப்பட்ட கொடிகள் ஆங்காங்கு அழகாக அலங்காரஞ் செய்யப் பெற்றுச் சிறந்து ஆடும் போலும். தெய்வங்கள் உறையும் திருக்கோயில்களிலே விழா குறித்துச் சிறப்புக்கள் பல நடைபெறுமாம். அறிஞர்கள் ஒருங்கு கூடித் தாம் கற்றவற்றைக் கருத்தாலும் சொல்லாலும் ஆய்ந்து நலம் காணுவார்களாம். பல்வேறு சமய வாதிகளும் வேறுபாடற்ற வகையில் அங்கு கூடி விழா இன்பத்தைத் துய்ப்பார்களாம். ஆடவரும் பெண்டிரும் அழகாக உடுத்து, பாடியும் ஆடியும் கடற்கரைக்குச் சென்று இன்புறுவார்களாம். எல்லாவற்றிற்கும்