பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

9


டுச் சென்றதாகவும் கூறினாள். மேலும் புகார் நகரிலுள்ள பல்வேறு மலர்ச் சோலைகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து. மணிமேகலை செல்லத் தக்க சோலை இது என்றும் கூறினாள். பலவற்றையும் ஒதுக்கி உவவனம் செல்ல வேண்டுமென்றாள் சுதமதி.

உவவனச் சிறப்பு

'புகார், சோலை சூழ்ந்த பேரூர். பல மலர் வனங்கள் அங்கே உண்டு. அவற்றுள் இலவந்திகைச்சோலை என்பது ஒன்று. அதில் எப்பொழுதும் அரசனது ஏவலர்கள் தங்கியிருப்பார்கள். எனவே அங்குச் செல்லுதல் இயலாது. அடுத்து உய்யானவனம் என்ற ஒரு சோலை உண்டு. அங்கே பெருமரங்கள் வாடா மலர்களைப் பூத்து நிற்கும். அங்கே கையினிடத்துக் கொண்ட பாசத்துடன் பூதங்கள் பல அவ்வனத்தை காத்து நிற்கும். எனவே அங்கும் செல்லலாகாது. மற்றும் சம்பாதி இருந்த சம்பாதிவனமும், கவேர வனமும் சிறந்தன வேனும், மிகப் பழைமையாகிய தொல்லை தரும் தெய்வங்களால் அவை காக்கப்படுவதாகச் சொல்லப் படுதலின் அவற்றினுள்ளும் மணிமேகலை செல்லல் இயலாது. ஆனால் யாவற்றினும் மேலாகச் சிறந்த உவவனம் என்ப தொன்று உண்டு. அதில் நிறைய மலர் மரங்கள் உள்ளன. புத்ததேவனது அருளினாலே அச்சோலை சிறந்துள்ளது.

'அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும்
ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பில்
பகவனது ஆணையில் பன் மரம் பூக்கும்
உவவனம் அது.'