பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

ஆருயிர் மருந்து


மேலும் அந்தச் சோலையில் அழகிய பளிங்கு மண்டபம் ஒன்று உண்டு. இடர் வரின் அதனுள் தங்கி யாரும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடும். அம் மண்டபத்துள் இருப்பின் உருவம் வெளித் தெரியுமேயல்லாது, ஓசை வெளியே கேட்காது. மேலும் அங்கு ஒரு சிறப்பும் உண்டு. அம்மண்டபத்தின் இடையில் ஒரு பதும பீடம் உண்டு. அதில் இட்ட மலர்கள் வாடாது.அப்பீடத்து நாம் ஒரு தெய்வத்தை நினைத்து ஒரு மலரை இட்டால் அம்மலர் உரிய தெய்வத்தைச் சென்று சேரும். யாதொரு நினைப்பும் இன்றி இட்டால் அது அங்கேயே இருக்கும். அதற்குக் காரணம் இது வாகும்,

'சிந்தையின்றியும் செய்வினை உறும் எனும்
வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது வாகவும்.'

அமைந்த பீடம் அது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பீடமும் மண்டபமும் உடைய அந்த உவவனத்திற்கே உன் மகள் மணிமேகலை செல்லக் கடவள்' என்று சுதமதி கூறினள். மேலும் அவளைத் தனியாக அனுப்பாது தானும் உடன் துணையாகச் செல்வதாகவும் கூறினாள்.

தெரு வழியில்

சுதமதி நினைத்தவாறே வழியிடை மணிமேகலையைக் கண்டவர் பலவாறு அவளது அழகைப் பற்றிப் பேசுவாராயினர். ஒரு புறத்தே ஒரு களிமகன் தன் கள்ளின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்