பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

11


தான். அவனைச் சூழ்ந்து வேடிக்கைப் பார்த்திருந்த மக்களும், பித்தனைக் கண்டு வருந்துவோரும், கண்கவர் வனப்பு மிக்க புகார் நகர மாளிகைகளின் சித்திரங்களைக் கண்டு கண்டு கருத்தழியும் மக்களும், இன்னும் பல்வேறு மக்களும் மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டார்கள். அவளது அழகைக் கண்டார்கள். அவர்கள் வாய்கள் அவர்களை அறியாமலேயே அழகையுடைய இவளைத் தவ வழியில் செலுத்திய இவள் தாய் மிகக் கொடியள்' என்று கூறின. அந்த மக்கள் மணிமேகலையைச் சூழ்ந்து நின்ற காட்சி சாத்தனாரை விராடநகருக்குப் பற்றிச் சென்றது போலும்.


'விராடன் பேருர் விசயனாம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறஞ் சுற்றி’

என்று அழகுபட உவமைப் படுத்திக் காட்டுகிறார். மக்கள் பலர் மனம்போன வழியாய்ப் பேசிக்கொண்டிருக்க மணிமேகலை சுதமதியோடு உவவனச் சோலையைச் சென்றடைந்தாள். மணிமேகலை இதற்கு முன் சோலைகளுக்குச் செல்லாதவள் போலும்,பணிப் பெண்கள் மலர் பறித்துக் கொடுப்ப, அதை மாலையாக்கிப் புத்த தேவனுக்கு அணிவிப்பாள் போலும், அன்று தான் செய்த தவறின் காரணமாக மாலை மாசு பட்டமையின் அக்குற்றத்திற்குக் கழுவாயென மாதவி மணிமேகலையை மலர் கொய்ய அனுப்பினாள் என்று எண்ண வேண்டியுள்ளது ஏனெனில் அவள் நாள்தோறும் செல்லுபவளாயின் வழியிடைக் கண்டார் அன்று மட்டும் கண்டு