பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

ஆருயிர் மருந்து


தம் கருத்தழிந்து அவ்வாறு பலபடப் பேசியிருக்க மாட்டார்கள். மேலும் என்று காண்போம், எங்கு காண்போம் என்று ஏங்கிக் கிடந்த உதயகுமாரன் அன்று அவள் சென்ற வழி அவளைத் தேடிச் சென்றிருக்க மாட்டான். எனவே புதிதாக வந்த அவளைப் பலரும் கண்டனர். உதயகுமாரனும் கொள்ள நினைந்தான். மேலும் சுதமதி அந்தப் புதுவனக் கவின்களையெல்லாம் அவளுக்கு விளக்கிக் காட்டியதாகச் சாத்தனார் கூறுகிறார். சுதமதி பலமுறை மலர் வனம் வந்தவள். ஒரு வேளை மணிமேகலைக்கு வேண்டிய மலரை அவள் தான் கொண்டு வந்தாளோ என எண்ணவும் வழியுண்டு. சோலையுள் புக்க மணிமேகலைக்குச் சுதமதி அதன் அழகுகளை யெல்லாம் காட்டிக்கொண்டு வந்தாள்.

சோலையைத் தேடி உதயகுமாரன்

மணிமேகலை புகாரின் பல தெருக்களையும் கடந்து கொண்டே வந்தா ளன்றோ! அவற்றுள் ஒன்று பரத்தையர் தெரு. அத்தெருவின் ஒரு மாளிகையிலே எட்டிகுமரன் என்பான் ஒருவன் இருந்தான். அவன் மணிமேகலை தெருவழியே செல்வதைக் கண்டான். அவளைக் கண்டதும் அவள் தந்தையாகிய கோவலனும் கண்ணகியும் பெற்ற கொடுந்துயரம் அவன் முன் நின்றது. ஒரு வேளை இவன் கோவலன் உயிர் நண்பனாயிருந்திருப்பான் போலும். அவ்வாறு கோவலனை எண்ணி வாடி வருந்திய எட்டிகுமரன் மனத்திண்மை மாறி யாழிலுள்ள பகை நரம்பில் கை செலுத்தி நிலை கெட்டிருந்தான். அதே வேளையில் அந்த வழியாக அந்நாட்டு இளவரசன் உதயகுமரன் தேரேறிச் செல்வானானான்.