பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

13


எட்டி குமரனைச் சாரள வழியாற் கண்ட குமரன் அவன் உற்ற வருத்தம் யாதென வினாவினான். எட்டிகுமரன் மணிமேகலை அவ்வழியாகச் சோலை சென்றதையும், அவளைக் கண்டபின் கோவலன் கண்ணகியை நினைத்துத் தான் நிலை கெட்டதையும் கூறினான். உடனே மணிமேகலையைக் காணவேண்டுமென்றும், அவளைக் கொள்ளவேண்டுமென்றும் கருதினவனான உதயகுமரன், 'நான் சோலை சென்று அவளை என் தேரில் ஏற்றிக்கொண்டு வருவேன்' என்று சொல்லிப் புறப்பட்டான். அவன் தேரொலி தூரத்தே கேட்டது. சோலைக்குள்ளிருந்த சுதமதியும் மணிமேகலையும் தேரொலி கேட்டுச் சிந்தை தளர்ந்தனர். வருகின்றவன் உதயகுமரனாயின் செய்வது யாது என்று வருந்திய மணிமேகலை சுதமதியை நோக்கினாள். அவளோ சிறிதும் காலம் தாழ்க்காது மணிமேகலையை அருகிருந்த பளிக்கு மண்டபத்துள் செல்லப் பணித்துக் கதவு அடைத்து, அக்கதவி னிடமும் தெரியாத வகையில் செம்மைப்படுத்தினாள். அதே வேளையில் சோழ இளவரசன் உதயகுமரன் உள்ளே புகுந்தான். பளிக்கறைக்கு வெளியே சற்றுத் தொலைவில் இருந்த சுதமதி அவனைக் கண்டு வணங்கினாள். அவனோ அவளை 'மணிமேகலை எங்கே' என்று கேட்டான். மேலும் இச் சுதமதி அவளுக்குத் துணையாய் வந்த காரணத்தையும் வினவினான். அவளோ அவன் மணிமேகலையை எண்ணிக் காமபரவசனாகவே வந்திருக்கின்றான் என்பதை அறிந்து அந்நினைவை மாற்ற முயன்றாள். அவள் முன்னே சோழன் கரிகாற் பெருவளத்தான் எப்படி முறை திறம்பாது 2