பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

ஆருயிர் மருந்து


இளமை நாணி முதுமை எய்தி அற முரைத்தான் என்பதை எடுத்துக் காட்டினாள். மேலும் அவன் நாடி வந்த உடம்பின் நிலையினைப் பற்றியும் கூறினாள். வினையின் வழியே வரும் இந்த உடம்பு அலங்கரித்தலுக்கு வேண்டிய பொருளும் புனைவும் இன்றேல் எவ்வாறு துர்நாற்றம் வீசும் தன்மையது என்பதையும் விளக்க உரைத்தாள். மேலும் இவ்வுடலில் குடி கொண்ட கொடுமைகள் எத்தகையன என்பதையும் அவள் கூற மறக்கவில்லை. அனைத்தையும் கூறி அத்தகைய உடலின் மேல் பற்று வைத்துத் தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதையும் மறந்து வந்தது தகாது என இடித்துரைத்தாள்.

சுதமதி சொல்லியவற்றைக் காதுகள் கேட்டனவேயன்றி உதயகுமரன் கண்ணும் கருத்தும் மணிமேகலையைத் தேடின. அவள் பளிங்கு அறைக்குள் இருப்பது அவன் கண்ணுக்குத் தெரிந்தது. அதன் உள்ளே செல்வதற்கு உரிய வழியைத் துருவித் துருவி ஆராய்ந்தான். அவன் மனம் மணிமேகலையைப் பற்றி அறிய விரும்பிற்று. அவள் எத்தகையவள் என்று சுதமதியைக் கேட்டான். அது கேட்ட சுதமதி, மணிமேகலை

'ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி
காமற் கடந்த வாய்மையள்'

என்று கூறினள். அதுகேட்ட அரச குமரன் ஆற்றானாய் ‘எப்படியும் அவளை அடைந்தே தீருவேன்' என்று உறுதி கூறினான். அவனால் பளிக்கறையின் வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவன் சுதமதியை நோக்கி 'நீயேன் மணிமேகலையுடன் வந்தாய்' என்று