பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

15


வெறுப்புடன் கேட்கலானான். சுதமதி தன் வரலாற்றின் மூலம் அவன் கருத்தை மாற்றக் கருதித் தன் கதையினைச் சொல்லலானாள். அவள் சொல்லியவாறே காண்போம்.

சுதமதி வரலாறு

' அரசே ! நின் கண்ணி வாழ்வதாக! நீ தீநெறிப் படரா நெஞ்சை உடையவனாகுக! நான் சண்பை நகரத்திலுள்ள கவுசிகன் என்பான் மகள். நான் தனிமையில் பூஞ்சோலையில் இருந்தபோது மாருதவேகன் என்னும் வித்தியாதரன் என்னைத் தன் வசமாக்கிக் கொண்டு வந்து இந்நகரத்து விட்டுச் சென்றான். என் தந்தையோ ஒழுக்கம் தவறாத உயர்நலப் பண்பாளன். நான் பிழை மணம் பட்டேன் என்பதற்காக அவன் பல துறைகளில் நீாரடிக் குமரிக்குச் செல்லும் வழியில் இந்நகரத்துக்கு வந்தான். வந்தவிடத்தில் என்னைக் கண்டனன். நான் பிழைபட்டவளாதலின் என்னை மீண்டும் அந்தணர் குலத்துள் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை அவன் அறிவான். எனினும் என்னையும் விட்டுத் துறந்து செல்ல அவன் விரும்பவில்லை.ஆகவே அவன் என்னுடனேயே இருந்து இரந்து உண்டு என்னையும் உண்பித்து வாழ்ந்து வந்தான்.

பிச்சையேற்று உண்ணப் பெருந் தெருக்களில் சுற்றிவருங் காலத்து ஒரு நாள் வழியிடை ஒரு பசு அவனைக் கொம்பால் குத்தி வயிற்றிடை நோய் செய்தது. அவன் ஆற்றாது வருந்தினான். நானும் அவனும் எம்மைப் பாதுகாப்பார் இன்மையின் வருந்தினோம். நான் முன்னே இருந்த சமணப் பள்ளியிடத்துச் சென்று