பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

ஆருயிர் மருந்து


காப்போர் உண்டோ' எனக் கதறினார் தந்தையார். 'யாரும் இல்லை' என்ற பதில் வந்தது. ஆயினும் எங்கள் அல்லல் சொல்லைக் கேட்டு ஆதரிக்க வந்தார் ஒருவர். ஆம். அவரும் மனைதோறும் பிச்சையேற்றுண்ணும் ஒருவர்தான். அவர் தன் பாத்திரத்தை என் கைக் கொடுத்து, தந்தையைத் தாங்கிக்கொண்டு மாதவத்தார் உறையும் இடத்தில் சென்று தேற்றித் தெளிய வகை செய்தார். அவர் புத்த சங்கத்தைச் சார்ந்து அச்சங்க நெறி தவறாது வாழ்பவர் என்று அறிந்தோம். புத்த தேவனது பொன்னடிகளைப் போற்றித் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராகிய பெரியோருடைய அத் தருமத்தை மேற்கொண்டு வாழ்தல் எங்கள் கடனென்று கருதி நாங்கள் அதைச் சார்ந்து வாழத்தொடங்கினோம். அது முதல் நான் புத்தர் அடிமறவாத மாதவியைச் சார்ந்து வாழ்கின்றேன்' என்று சுதமதி தன் வரலாறு முழுமையும் விளக்க உரைத்தாள். அவ்வரலாற்றைக் கேட்டுக்கொண்டே பளிக்கு மண்டப வாயிலைத் தேடிக் கொண்டிருந்த அரசகுமரன் அச்செயலில் வெற்றி பெறவில்லை. எனவே அவன் சீற்றம் முன்னிலும் மிக்கது.

'வஞ்சி நுண்ணிடை மணிமேகலை தனைச்
சித்திராபதியால் சேர்தலும் உண்டு'

என்று கூறி அவ்விடத்தை விட்டு வெளியேறினன் உதயகுமாரன்.

மனத்தடுமாற்றம்

அரசகுமாரன் சென்ற பின்பு சுதமதி பளிக்கறை யின் கதவைத் திறந்து மணிமேகலையை வெளியே விட்டாள். வந்த மேகலையின் முகத்தை நோக்கினாள் சுத