பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

17


மதி. அதில் கண்ட மாற்றம் அறிந்தாள். அவள் காரணம் வினவுமுன் மணிமேகலை தன் மனத் தடுமாற்றத்தைத் தானே கூறினாள். தன்னை அவ்வரசகுமாரன் எவ்வளவு பழித்துரைத்த போதிலும் தன் மனம் அவனைப் பற்றிச் சென்ற காரணம் யாதோ' என்று வினவினாள். காமத் தியற்கை அதுவாயின் அக்காமம் கெட்டொழிவதாக என்று வெறுத்தாள். அவர்கள் அவ்வாறு நின்றுகொண்டிருக்கும் வேளையில் மாலைக் காலம் வந்துற்றது.

மணிமேகலா தெய்வம்

அந்த மாலை வேளையில் மணிமேகலா தெய்வம் அச் சோலையினுள் புகுந்தது. அந்நகரில் நடக்கும் இந்திரவிழாவைக் காண வந்த பெருந் தெய்வம் அது. அச்சோலையுள் அது தனது மந்திர வலிமையால் தன் உருமாற்றி ஒரு மாயவித்தைக் காரியைப் போன்று வந்தது. அங்கு அவர் தம் அருகில் உள்ள பளிக்கறையில் புகுந்து பீடிகையை வலங்கொண்டு, உயர எழும்பி அப்புத்தனது பெரும் புகழைப் பாடிற்று. இருவரும் கண்டு வியந்து நின்றனர்.

அதற்குள் பொழுது சென்று நன்கு இருட்டவே சுதமதியும் மணிமேகலையும் தம் மாளிகை செல்வதற்கு வழி யாது என்று சிந்தித்தனர். அவர்தம் நினைப்பினையறிந்த மணிமேகலா தெய்வம் அவர்களை அப்போது அவ்வழியே செல்ல வேண்டாம் என்று வற்புறுத்தியது. மேலும் அவர்கள் இருவரும் அடைந்த துன்பத்திற்குக் காரணத்தை முன்னமே கேட்டறிந்தமையானும், மணிமேகலையை விரும்பி உதயகுமரன் அவர்கள் தெருவிடைச் செல்லும் வழியில் எப்படியும் கைப்பற்று