பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

ஆருயிர் மருந்து

வன் என்று அறிந்ததனாலும் அவர்களை அவ்வழியே செல்லவேண்டாமென்று சொல்லிற்று. மற்றும் அந்த இடம் தவசிகள் தங்கும் இடமாதலின் உதயகுமரன் ஒன்றும் செய்யாது சென்றான் என்றும், வெளியே செல்லின் அவன் கட்டாயம் அகப்படுத்துவான் என்றும் உரைத்தது. மேலும் அது அவர்களுக்கு மற்றொரு. வழியும் உரைத்தது. மேற்கே உள்ள சிறுவழி மூலம் அடுத்துள்ள சக்கரவாள கோட்டத்திற்குச் செல்லின் அங்கே முனிவர்கள் உள்ளமையின் அவர்களுக்கு யாதொரு தீங்கும் நேராது என்றும் வற்புறுத்தியது. அது கேட்ட சுதமதி சுடுகாட்டுக் கோட்டத்தை 'நீயும் மாருதவேகனும் சக்கரவாள கோட்ட மென்றீர்கள். அதன் காரணம் என்ன? என்று கேட்டாள். தெய்வம் காரணத்தைச் சொல்லத் தொடங்கிற்று.

சக்கரவாள கோட்டம்

‘இப் புகார் நகரம் தோன்றிய அந்தக் காலத்திலேயே உடன் உண்டான சுடுகாடு இச்சோலையின் பக்கத்தில் உள்ளது. அச் சுடுகாட்டில் பிணங்களைச் சுடுவதற்குப் பல்வேறு வகை ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். காளி கோட்டமும் அங்கு உண்டு. அழும் ஒலியும், பேயின் ஆரவாரமும் அடங்காத காடு அது. பல் வேறுவகை மரங்கள் நிறைந்த சுடுகாடு அது' என்று அச் சுடுகாட்டு நிலையை நன்கு எடுத்துக் காட்டிற்று தெய்வம். அத்துடன் அச் சுடுகாட்டையே சான்றாக உலக மக்களுக்கு சாத்தனார் அறிவுறுத்திய நெறி அறிந்து மேற் கொள்ளத்தக்கதாகும். யாதொரு வேறு பாடுமின்றிச் செல்வர் வறியர் என்று நோக்காது- தவத்தோர் அல்லோர் என்று எண்ணாது-ஆடவர்