பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து

19

பெண்டிர் என்று அறியாது-இளையர் முதியோர் என்று கருதாது - இச்சுடலை எல்லோரையும் தின்று வாழும் நிலை கண்டும் மக்கள், தாம் என்றும் இருப்பவர் என்று எண்ணி, அறத்துறை நீங்கி, மறத்துறை பற்றி வாழ்கின்றார்களே என வழுத்துகின்றார் சாத்தனார். அவர் அடிகளையே அறிதல் நலமாகும்.

'தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றுப் பாலகர்
முதியோர் என்னான் இனையோர் என்னான்
கொடுத்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப
அழல்வாய் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோர் உண்டோ'.

என்பன மணிமேகலை அடிகள்.

'இத்தகைய சுடுகாட்டில் ஒரு நாள் பார்ப்பனச் சிறுவனாகிய சார்ங்கல னென்பான் வந்து பயந்து நிலை கெட்டுத் தன் தாயிடம் சென்று தான் பட்ட படுதுயர் கூறி உயிர் விட்டான். கண்ணிழந்த அவன் தாயாகிய கோதமை அவன் உடலை அக்கோட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி,ஆண்டு 'சம்பாபதி' என்னும் தெய்வத்தை வருந்தியழைத்தாள். அறிந்த சம்பாபதி எதிர் நின்று அவள் வருத்தத்தின் காரணம் கேட்டது. அவள் தான் பெற்ற வருத்தத்தை உரைத்து தன் மைந்தன் உயிருக்குப் பதில் தன் உயிரைக்கொண்டு அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் உடலை விட்டு நீக்கிய உயிர் அதன் வினை வழியே செல்