பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20

ஆருயிர் மருந்து

லும் என்பதையும், ஒரு உயிர்க்கு மற்றோர் உயிர்க் கொள்ளல் யார்க்கும் முடியா தென்பதையும் தெய்வம் விளக்க உரைத்தது. அதை நிறுவ எல்லாத் தெய்வங்களையும் ஒரு சேரக் கொண்டு வந்து நிறுத்திக் கோதமையின் விழைவைக் கூறிற்று. தெய்வங்கள் அனைத்தும் சம்பாபதி சொல்லியதையே வற்புறுத்திக் கூறின. கோதமை தேறுதல் பெற்று வேறு வழியின்றி மகனை ஈமத்திட்டு இறந்தாள்.

பின்னர் சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற அங்கேயே பக்கத்தில் எல்லாத் தேவரும் கூடியதன் அறிகுறியேயென மேரு மலையையும் பிற தீவகங்களையும் உண்டாக்கி அங்கு வாழ் தேவரையும் பிறறையும் உருவமைத்து மயனைக் கொண்டு அழகு செய்வித்தது. அந்த இடமே சக்ரவாள கோட்டம் என்று பெயர் பெற்றது. இது சுடுகாட்டின் பக்கத்தே உள்ளதால் சுடுகாட்டுக் கோட்டம் என்று பெயர் பெற்றதன்றி வேறன்று. நீங்கள் அங்கு செல்லின் அரசகுமாரனால் வரும் அல்லல் இல்லை' என்று மணிமேகலா தெய்வம் கூறியது. இவற்றையெல்லாம் கேட்ட மணிமேகலையும் சுதமதியும் மயக்க மெய்தினர். மணிமேகலை தெய்வங் கூறியவற்றையெல்லாம் நினைத்து நினைத்து மனித வாழ்வு இத்தகைமைத்தோ என்று உறங்காது இருந்தாள். சுதமதியோ தன்னை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தாள். பின் மணிமேகலையும் உறக்க மயக்கம் பெற, அவ்வேளையில் மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தூக்கிச் சென்று தெற்கே முப்பது யோசனை தூரத்துக்கு அப்பாலுள்ள மணிபல்லவம் என்னும் தீவிற்குக் கொண்டு சேர்ந்தது.

_______