பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மணி பல்லவத்திலே

சுதமதியின் துயர்

மணி பல்லவத்திலே மணிமேகலை தன்னை மறந்து மயங்கிக் கிடந்தாள். அதற்குள் அத்தெய்வம் திரும்பவும் புகார் நகரில் புகுந்தது. மணிமேகலையின் நினைவாலே வருந்தி வாட்டமுற்று இரவெல்லாம் உறக்கமின்றி வாடிய அரசகுமாரன் முன்னே சென்றது. சென்று கோல்கோடா முறையில் அவன் இருக்கவேண்டிய அறநெறியை உணர்த்திற்று.

'மன்னவன் மகனே
கோன்நிலை திரிந்திடில் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்
(எனவே) தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிக'

என்று அறிவுறுத்திற்று. பிறகு அங்கிருந்து சென்று சுதமதி துயில்கொள்ளும் சக்ரவாள கோட்டத்தைச் சார்ந்தது. உறங்கிய சுதமதியைத் தட்டியெழுப்பிற்று. எழுந்த அவள் மணிமேகலையைத் தேடிக் காணாது கவல்வதன் முன்னே பேசத் தொடங்கிற்று.

தான் இந்திர விழாவினைக் காணக் காவிரிப்பூம்பட்டினம் வந்ததையும், வந்தவிடத்தே மணிமேகலையைக் கண்டு அவளை மந்திரத்தால் மணி பல்லவத்