பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

> ஆருயிர் மருந்து காகவே நான் உன்னை இத்தீவிற்குக் கொண்டு வந்தேன். நீயும் வந்து புத்த தேவனது அழகார் பீடிகையைக் கண்டு உன் பழம் பிறப்பு உணர்ந்தாய், மேலும் கேள். 29 'சென்ற பிறவியில் உனக்கு இருதமக்கையர் இருந் தனர். அவர்கட்குத் தாரை, வீரை என்பன பெயர் களாக அமைந்தன. அவர்கள் இருவரும் அங்க நாட்டுக் கச்சய நகரத்து மன்னனாகிய துச்சயன் என்பானை மணந்து அவனொடு இல்லற மேற்று வாழ்ந்து வந்தனர். ஒருநாள் அவர்கள் தம் கணவருடன் அருகே உள்ள மலை வளங்களை யெல்லாம் கண்டு கொண்டு, கங்கைக் கரையை அடைந்தனர். அதுபோது அங்கே அறவண வடிகள் வந்து சேர, அவரைக் கண்டு அவர்கள் வணங்கி அவரை யார் என்றும் வந்த காரணம் என்ன வென்றும் கேட்டார்கள். அவர் தம்மை அறவணவடி கள் என்று கூறி, பாதபங்கய மலையைத் தரிசித் தற்குத் தாம் அங்கு வந்ததாகக் கூறினார். மேலும் அப் பாதபங்கயமலை, அன்றொரு நாள் புத்ததேவன் பாரக மடங்கலும் பவமும் பிணியும் துயரும் தொடக் கும் நீங்க வேண்டி., உயிர்களெல்லாம் கேட்டு உண்மை உணரும்படி அம் மலைமேல் நின்று அறநெறி உப தேசித்த காரணத்தரல் அப்பெயர் பெற்றது என்றும் விளக்கினார். அவர்களும் அம்மலை கண்டு வழிபட்டு நலம் பெறவேண்டும் என்று வற்புறுத்தினார். அவர் களும், அவ்வாறே சென்று அம் மலையினைக் கண்டு போற்றினர். போற்றிய பேற்றின் காரணமாகத் தாரையும் வீரையும் தற்பொது மாதவியும், சுதமதியு மாக வந்து உன்னைப் பிரியாது உறைகின்றனர் என்று 3 .