பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

28 மற்றவர் பிறப்பு மணிமேகலையின் பழம் பெயராகிய இலக்குமி' என்றே அவளை அழைத்துச் சொல்லியது. ‘இலக்குமி, கேள், நீயும் உன் கணவனாகிய இராகுலனும் ஒரு நாள் சோலை ஒன்றில் தனித்துப் பொழுதுபோக்கிக் கொண் டிருந்தீர்கள். அப்போது நீ ஊட, அதன் காரணமாக இராகுலன் உன் பாதங்கனைப் பணிந்தான். அதே வேளையில் இரத்தின தீவகம் சென்று ஆண்டு புத்த தேவனது பொய்யா அறத்தை உபதேசித்துத் திரும் பிய சாதுசக்கரன் என்னும் முனிவன் வான் வழியே இறங்கினன். அது கண்டு நீ அச்சமுற்றாய். உன் கண வனோ ‘யார் இங்கே வந்தவன்?' என்று சீற்றத்தோடு கேட்டான். நீ அவன் வாயைப் பொத்தி, வான் வந்த தேவனை வணங்கி வாழ்த்துவ தல்லது பழித்துரைத் தல் பொருந்தாது என்று உரைத்தாய். பின்னர் நீயும் அவனும் அம்முனிவனுடைய திருவடிகளை வீழ்ந்து வணங்கினீர்கள். வணங்கி அமுது செய்ய வேண்டினீர் கள். வரும் உங்கள் வேண்டுகொளுக்கு இணங்கி அமுதினை அங்கே கொண்டு வரப்பணித்து, உண்டு, உங்களை வாழ்த்திச் சென்றார். அவரை உண்பித்து அவரது வாழ்த்துப் பெற்ற சிறப்பினால் நீ இப்பிறவி யில் நலம் பெற்றுப் பிறவா நெறியைப் பெறப் போகி றாய். இன்னும் கேள். ஆருயிர் யருந்து முன்னைப் பிறவியில் உன் கணவனாக இருந்த இராகுலனே இப்பிறவியில் அரச குடும்பத்தே உதய குமரனாக வந்து பிறந்துள்ளான். அதனால்தான் அவன் உன்னை விரும்பியதோடன்றி உன் மனமும் அவன்பால் விரும்பிச் சென்றது. அந்தப்பற்றை மாற்றுவதற்