ஆருயிர் மருந்து
27
பான், நீ இவனோடு தீப்புகுவாய் ; பின் காவிரிப்பூம்
பட்டினத்தில் பிறப்பாய். அப்போது உனக்கு வரும்
துன்பந் துடைக்க மணிமேகலா தெய்வம் வந்து
தோன்றி உன்னை மணிபல்லவத்தில் கொண்டு சேர்க்
கும். அங்குள்ள புத்த பீடிகையைக் கண்டு வணங்கி
உன் பழம் பிறப்பு உணர்வாய் என்று கூறினீர்கள்.
நான் என் கணவன் மறு பிறப்பில் என்னாவான் என்று
கேட்டேன். அதற்குத் தாங்கள் உன்னைக்கொண்டு
செல்லும் தெய்வம் மறுபடி உன் முன் வந்து அவன்
வரலாற்றை உணர்த்தும் என்று கூறினீர்கள். அத்
தெய்வம் வரவில்லையே' என்று வாய்விட்டுக் கூறினாள்
மணிமேகலை.
தெய்வத் தோற்றம்
மணிமேகலை பீடிகை முன்னர் அவ்வாறு தாழ்ந்து
வேண்டிக் கொண்டிருக்கையில் வான் வழியாக மணி
மேகலா தெய்வம் வந்து இறங்கியது. அத்தெய்வம் வரும்
போதே புத்த பீடிகையைப் புத்த தேவனே என்று
கருதி அவன் புகழ்பாடிப் போற்றிக் கொண்டே வந்
தது. அவ்வாறு வந்த தெய்வத்தைக் கண்டு, அதுவே
மணிமேகலா தெய்வம் என்பதை உற்றறிந்த மணி
மேகலை அதன் அடிபணிந்தாள். பணிந்து தெய்வத்தின்
அருளால் தான் புத்த பீடிகையைத் தரிசித்துப் பெற்ற
பேற்றினையும், தன் பிறப் புணர்ந்ததையும் கூறி, தன்
முன்னைப் பிறவியின் கணவனாகிய இராகுலன் எங்கே
பிறந்துள்ளான் என்பதைத் தான் அறிய விரும்பியதாக
உவும் கூறினாள். அதைக் கேட்ட தெய்வம் இராகுலன்
முதலியோருடைய அன்றைப் பிறவியைப் பற்றிக்
கூறத் தொடங்கிற்று.