பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து நகரைத் தலைநகராகக் கொண்டு அத்திபதி என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனிடம் மைத்துனக் கேண்மையால் சென்றாய். சென்று அறநெறியை அவ னுக்கு உணர்த்தினாய். அத்துடன் அன்றைய ஏழாம் நாளில் அச்சம்புத்தீவில் ஒரு பெரும் நிலநடுக்கம் உண் டாகும் என்றும், அதனால் அந்த இடவய நகரும் அதைச் சுற்றியுள்ள நாக நாட்டின் நாநூறு யோசனைப் பரப்பும் பாதலத்தில் விழும் என்றும். அதனால் அந்நகர் விட்டு அப்போதே செல்லவேண்டும் என்றும் உணர்த்தி னாய். அவனும் உடனே அந்நகரத்தார்க்கும் மற்றவர் களுக்கும் பறையறைந்து செய்தியைத் தெரிவித்து, அவ் விடத்தை விட்டு நீங்கிக் காயங்கரை யென்னும் ஆற்றங் கரையில் தங்கி யிருந்தான். பின் நீ குறித்தபடியே நில நடுக்கம் உண்டாகி அப்பகுதிகளை அழித்தது. அந் நிகழ்ச்சி அறிந்த அரசனும் பிறரும் உன் ஏற்றத்தையும் சீலத்தையும் அறிந்து உன்னைச் சரணமடைந்தார்கள். நீயும் அவர்களுக்கு அறநெறியை உணர்த்திக் கொண் டிருந்தாய். 26 அவ்வாறு அறம் உணர்த்தும்பொழுது நான் என் கணவனோடு வந்து வணங்கினேன். ஆம். என் முன்னைப் பிறவியின் கணவன் இராகுலன் என்பான். நான் அசோதர நகரத்து அரசனாகிய இரவிவர்மனுக்கும், அவன் மனைவி அமுதபதிக்கும் மகளாய்ப் பிறந்திருந் தேன். இராகுலனோ அத்திபதி என்னும் அரசனுக்கும் நீலபதி என்பாளுக்கும் மகனாகப் பிறந்திருந்தான். நாங் கள் இருவரும் உன் அருகில் இருந்து அறம் கேட்ட அந்த நாளிலே, " இராகுலன் இன்றைக்குப் பதினாறாம் நாளில் திட்டிவிடங்கன் என்னும் பாம்பால் இறப்