உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து 25

பக்கம் சுற்றி வந்த அவள் புத்த பீடிகை பொருந்தி யுள்ள அந்தப் புனித இடத்தின் அருகிலே வந்தாள். உலகெலாம் உய்யவேண்டி, ஒரு பெரு அரச இன் பத்தைத் துறந்து, அல்லலற்ற இன்ப வாழ்வை உலகுக்குத் தேடித் தரப் பாடுபட்ட செல்வன் - புத்த தேவனது பீடிகைக்கு முன்னே மணிமேகலை வந்து நின்றள்.

பீடிகையைப் போற்றல்

தன் எதிரில் புத்த பீடிகையைக் கண்டதும் கருத்தழிந்த மணிமேகலை தன்னை மறந்தாள். அவளது காந்தளஞ் செங்கைகள் தலைமேல் குவிந்தன. கைகுவித்து வணங்கி அப்பீடிகையை வலம் வந்து போற்றினாள். நின்ற அளவிலே மணிமேகலையின் பழம் பிறப்புணாச்சி கள் ஒன்றன் பின் ஒன்றாக உருப்பெறத் தொடங்கின. நினைத்து நினைத்து அப்புத்த தேவன் முன் ஒவ் வொன்றாக எண்ணத் தொடங்கினாள்.

தொழுததை மாதவ துணிபொருள் உணர்ந்தோய் காயங் கரையில் நீ உரைத்தவை யெல்லாம் வாயே யாகுதல் மயக்கற உணர்ந்தேன்.

என்று கூறி அவர் உரைத்தவை என்னென்னவென்று யாவரும் அறிய எடுத்துக் காட்டுகின்றாள் மணிமேகலை.

மேகலையின் பழம் பிறப்பு

மணிமேகலை தன்வாயாற் கூறிய வரலாற்றை அவள் வாய் மொழிப் படியே காணல் சாலச்சிறந்த தாகும். 'கந்தாரம் என்பது பழம் பெரு நாடு, அந் நாட்டிலுள்ள பூருவதேசத்தில் இடவயமென்னும்