பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து 24 தீவிடை மணிமேகலை புகார் நகரில் இவ்வாறு சுதமதியும் மாதவியும் வயாவும் வருந்தமும் எய்திய இதே வேளையில் அங்கு மணி பல்லவத்தில் விடப்பட்ட மேகலை கண் விழித் தாள். அனைத்தும் புதிதாகத் தோன்றியது. அப்புது டத்தைக் கண்ட மணிமேகலை ஒன்றும் அறியாது அரற்றினள். ஒரு வேளை அதுவும் உவவனத்தின் ஒரு மோ என நினைத்தாள். வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று முன்னையும் பின்னையும் அறியாது அலறினாள். சுதமதியைப் பலமுறை விளித்தாள். ஆனால் பதில் பெறவில்லை. 'விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சம் செய்தனள் கொல்லோ அறியேன்" என்று அலமந்தாள். பொழுது விடிந்த பின் னும் வீடு செல்லாவிட்டால் பெற்ற தாயாகிய மாதவி வருந்துவாளே என்று நினைத்தாள். பலவாறு நினைந்து நினைந்து, நைந்து நைந்து, அத்தீவின் பல பாகங்களிலும் சுற்றித் திரிந்தாள் மணிமேகலை. தன் தந்தையை நினைத்தாள். 'எம்மிதிற் படுத்தும் வெவ்வினை உருப்பக் கோற்றெடி மாதரொடு வேற்றுநா டடைந்து வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து ஜயவோ′ என்று வாய்விட்டரற்றி அவர் தம் குடும்பத்தை வழி வழி வருத்தும் விதியை நொந்தாள். புத்த பீடிகை தோன்றல் புகலிடம் காணாது புது இடத்தே இவ்வாறு வருந்தும் மணிமேகலைக்கு நற்காலம் நெருங்கிற்று. பல