பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து 23' தூணிற்பாவை சொல்லியது அவள் வருத்தத்தை அறிந்தது போன்று அவள் தங்கியிருந்த இடத்தின் பக்கத்திலே இருந்த தூணில் நின்ற தெய்வம் பேசத் தொடங்கிற்று. சுதமதியின் முற்பிறப்பை எல்லாம் எடுத்துச் சொல்லிற்று. முற் பிறப்பில் மாதவி, சுதமதி, மணிமேகலை மூவரும் உடன் பிறந்தவர்கள் என உணர்த்திற்று. அவள் முற்பிறப்பின் தந்தை இரவிவர்மன் என்றும், கணவன் துர்ச்சயன் என்றும் கூறிற்று. தன் தங்கையாகிய தாரை இறக்க, மயங்கி யானைமுன் அவள் வீழ்ந்து உயிர் துறந்ததை உணர்த்திற்று. அத்துடன் இப்பிறப்பில் அவள் சண்பை நகர்க் கௌசிகன் மகளாய்ப் பிறந்து, மாருத வேகனோடு அங்கு வந்த வகைபையும் கூறிற்று. அத் தனையும் கூறி மணிமேகலை இவையெல்லாவற்றையும் இன்னும் பலவற்ைைறயும் அறிந்து அன்றைய ஏழாம் நாள் வருவாள் என்பதையும் எடுத்துரைத்தது. அதற்குள் பொழுது புலரும் நேரமாயிற்று. விடிதற் கேற்ற நகர முழக்கங்கள் ஆரவாரம் செய்தன. கதிர வனும் கீழ்த்திசையில் தோன்ற ஆரம்பித்தனன். மாதவி வருத்தம் அந்தக் காலைப்போதில் சுதமதி சக்கரவாள கோட்டத்தை விட்டுப் புறப்பட்டுத் தெரு வழியே நடந்து மாதவியைச் சார்ந்தாள். தனித்து வந்த சுத மதியை நோக்கி, 'மணிமேகலை எங்கே' என்றாள் மாதவி. சுதமதி அங்கு நடத்த அத்தனையும் விளக்க உரைத் தாள். கேட்ட மாதவி கலங்கி நன்மணியிழந்த நாகம் போன்றும், இன்னுயிரிழந்த யாக்கை போன்றும் வருந்தி வாடியிருந்தாள். "