பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

> ஆருயிர் மருந்து 31 தீவதிலகை தெய்வம் சென்ற நெறி நோக்கிச் சிறிதுகாலம் நின்றிருந்தாள் மணிமேகலை. பின்னர் அத்தெய்வத்தை வாழ்த்தி. அத்தீவிலுள்ள பிறநலன்களையும் காண விரும்பி, மணற்குன்றங்களையும் மற்றைய சிறப்பு களையும் கண்டு கொண்டே சென்றாள். அவ்வாறு செல்லும் போது புதியவளாகக் கடவுட் கோலத்து ஒருத்தி அவள் முன்னே வந்து தோன்றி, கலங் கவிழ் மக்களின் வந்து ஈங்கு எயதிய இலங்கு தொடி நல்லாய் யார் நீ? என்று கேட்டாள். இது கேட்ட மணிமேகலை யார் என் றது எப்பிறப்பினைப் பற்றி என்று பதிலுக்கு வினவினாள், முன்னைப் பிறவியிலும் இந்தப்பிறவியிலும் அவள் இருந்த நிலையையும் எடுத்துக் கூறினாள். மேலும் அங்கு தான் எவ்வாறு மணிமேகலா தெய்வத்தால் கொண்டு வரப்பட்டாள் என்பதையும் கூறி அவளை யார் என்று கேட்டாள், உடனே எதிரே நின்ற தீவ திலகை தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினாள். "இத்தீவின் அயலிலே உள்ள இரத்தின தீவ கத்து மிகவும் உயர்ந்துள்ள சமந்தகமலையில் தோன்றும் 'அறவியங்கிழவோன் அடியிணையாகிய, பிறவியென் றும் பெருங்கட லவிழ்க்கும்' நாவாய் ஒன்று உளது. அதைத் தரிசித்து இத்தீவிற்கு வந்து இப் பீடிகையைக் காத்து வருகிறேன். என் பெயர் தீவதிலகையாகும் ” என்று தன் வரலாற்றைக் கூறினள். மேலும் அங் குள்ள புத்த பீடிகையை வணங்குவார் பெறும் பயனை யும் பழம் பிறப்புணர்ச்சியையும் எடுத்து விளக்கினள்.