பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

32 ஆருயிர் மருந்து கோமுகிப் பொய்கை . அவற்றை யெல்லாம் விளக்கியபின் தீவதிலகை அருகிலே உள்ள கோமுகி என்னும் பொய்கையின் சிறப்பை எடுத்து கூறுவாளானாள். மலர்கள் நிறைந்த அந்த மலர்ப் பொய்கையி னிடையில் இளவேனிலில் வைகாசித் திங்களில் வீசாக நன்னாளில் ‘மீனத்திடை நிலை மினத் தகவயின் பண்டு ஆபுத்திரன் கையிடை யிருந்த அமுத சுரபி யென்னும் பாத்திரம் போதித் தலைவனோடு பொருந்தித் தோன்றும். மேலும் அவ் வைகாசித் திங்களும் நாளும் மீனப் பொழுதும் அப் போதேயாமாகலின் அவர்கள் அப் பொய்கைக் கரை யிடைச் சேன்றால் அது வெளி வருவதைக் காணலாம் என்றாள். அது ஒரு வேளை மணிமேகலை கையினிட வருதலும் கூடும் என்றாள். அதிலிடும் ஆருயிர் மருந் தாகிய உணவோ, வாங்குவார் கையை வருத்து மல் லாது, ஒரு சிறிதும் குறையாது வளந்து வரும் தன்மை யுடைய தாகும் என்று சொல்லி, மேலும் அதன் சிறப்பை எல்லாம் அறவணடிகளிடத்துக் கேட்டு அறிந்துகொள்ளவும் கூறினள். பாத்திரம் பெறுதல் று பாத்திர மரபறிந்த செல்வியாகிய மணிமேகலை புத்த பீடிகையை வலஞ்செய்து வணங்கி, தீவதிலகை யுடன் சென்று கோமுகிப் பொய்கையை வலம் வந்து வணங்கி நின்ற பொழுது-அந்த வைகாசி விசாக நிறை மதி நன்னாளில்- அந்த நல்ல வேளையில்-அப்பாத்திரம் பொய்கையில் தோன்றி அங்கேயே நிற்காது விரைந்து வந்து மணிமேகலையின் கையில் புகுந்தது. அதுகண்டு மகிழ்ந்த மணிமேகலையின் வாய் புத்ததேவனை வாழ்த் திற்று.