பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து மாரனை வெல்லும் வீர நின்னடி பிறர்க்கற முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி யெண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி கண்பிறர்க் களிக்கும் கண்ணேய் நின்னடி தீமொழிக் கயைந்த செவியோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி வணங்குத லல்லது வாழ்தல் என் நாவிற்கு அடங்காது" 33 என்று போற்றினாள். இவ்வாறு புத்த தேவனைப் போற்றி நின்ற மணிமேகலைக்குப் பாத்திரத்தின் பெரு மையைக் கூறப்புகுந்தாள் தீவதிலகை. அப்பாத்திரத் தில் இடும் ஆருயிர் மருந்து எடுக்க எடுக்கக் குறையாது வளரும் ஆதலால் நாட்டிடைச் சென்று நல்லறம் ஆற்ற வேண்டும் என்று வற்புறுத்தினாள். பசியின் கொடு மையை அவள் பலவாறு விளக்கிக் காட்டி, அப்பசி யைப் பாவி என்று கூறி அப்பாவியைக் கொல்லும் வகையில் அனைவருக்கும் சோறு அளிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தாள். மேலும் அவ்வறநெறி பற்றி, · ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்ற மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை மண்திணி ஞாலந்தூ வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே