பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

48 ஆருயிர் மருந்து நாட்டு மக்களை உண்பித்தது. அதன் செயலை யெல்லாம் கண்டறிந்த, காலம் மூன்றும் உணர வல்லவனாகிய அம் முனிவன் 'அதன் வயிற்றினிடத்துத் தோன்றும் பொன் முட்டையிலேயே மழை வளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும், உயிர்க் காவலன் ஒருவன் வந்து தோன்று வன், என்று கூறினான். அவன் கூறியபடியே நல்ல தொரு நாளிலே ஆபுத்திரன் அப்பசு வயிற்றில் பிறந் தான். நோயின்றியும் கூட, அறமாற்ற வழியில்லையே ; இறந்து வேறிடத்துப் பிறந்தாயினும் அறஞ் செய் வோம்' என்ற செம்மை உள்ளத்தோடு மணிபல்லவத் தில் இறந்த ஆபுத்திரன் பிறந்த நாள் வைகாசி மாத நிறைமதி நாளாகும். அவன் பிறந்த நாளை

  • இருது இளவேனில் எரிகதிர் இடபத்து

ஒருபதின் மேலும் மூன்றும் சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் போதித் தலைவனோடு பொருந்தித் தோன்றும்’ நாள் என்று கூறுகின்றார் சாத்தனார். அவர் பிறந்த நாளில் நாட்டில் பல நன்னிமித்தங்கள் நிகழ்ந்தன. புத்ததேவன் பிறக்கும் காலத்தில் நிகழ்ந்த நிமித் தங்கள் அவையென்று அறிந்த சக்கரவாள கோட்டத் தில் வாழும் தவசிகள் என்னகாரணமோ இவ்வேதுக் களுக்கு என்று எண்ணியிருந்தனர். 'மண்ணக மெல் லாம்'மாரி யின்றியும், புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்த அந்த அற்புதத்தை அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு அண்மையிலிருந்த கந்திற்பாவை நிகழ்ந்ததை உரைத்தது. மணிபல்ல